பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/981

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

980


Napier, John

980

ΝΑΤ

நொடிக்கும் குறைவான நேரத்தில் நிரலைச் செய்யவல்லன. ஒரு நொடியில் ஒரு பில்லியன் நிரல்களைச் செய்யவல்லதாக கணினி உருவாகி உள்ளது.

Napier, John : 1550-1617 : ஜான் நேப்பியர் : (1550-1617) : கணக்கிடுதல் மற்றும் கணிதத்தில் பல சாதனைகளைப் புரிந்த ஸ்காட்டிஷ் பிரபு. மடக்கை (லாகரிதம்) யும் நேப்பியரின் கோல் என்னும் கணக்கிடும் சாதனத்தையும் உருவாக்கியவர்.

napiers bones : நேப்பியரின் கோல்கள்; நேப்பியர் குச்சிகள் : பெருக்கவும், வகுக்கவும், வர்க்கமூலம் கண்டுபிடிக்கவும் பயன்படும் எண் கம்பிகளைக் கொண்ட தொகுதி. 1614இல் ஜான் நேப்பியரால் கணக்கிடும் கம்பிகள் உருவாக்கப்பட்டன. ஸ்லைடு ரூலைக் கண்டுபிடிக்க 1630இல் வில்லியம் ஆட்ராட் இதைப் பயன்படுத்தினார்.

narrowband : குறுகிய கற்றை : குறைந்த அலைவரிசைகளில் குறைந்த அளவு தரவுகளைக் கையாளும் தகவல் தொடர்பு அமைப்புகளை இது குறிப்பிடுகிறது.

narrow bandwidth channels : குறுங்கற்றை வழித்தடங்கள் : தந்திர வழித் தடங்கள் போன்ற குறைந்த வேகங்களில் மட்டுமே தகவல்களை அனுப்பும் தகவல் தொடர்பு வழித்தடங்கள்.

narrow SCSI : குறுகிய ஸ்கஸ்ஸி : ஒரு நேரத்தில் எட்டு துண்மி (bit) தரவுவை மட்டுமே அனுப்பவல்ல ஸ்கஸ்ஸி அல்லது ஸ்கஸ்ஸி-2 இடைமுகம்.

NASA : நாசா : National Aeronautics and Space Administration என்பதன் குறும்பெயர்.

nass-schneidermann chart : நாஸ்-சினைடர்மேன் விளக்கப் படம் : 1970 களின் ஆரம்பத்தில் ஐசக் நாசி மற்றும் பென் சினைடர்மேன் உருவாக்கிய ஒரு வகை ஒடுபடம். பல்வேறு வடிவமுடைய பெட்டிகளையும் வடிவங்களையும் பயன்படுத்தி பொருள்களை உற்பத்தி செய்தல் அல்லது சேவைகளை அளித்தல் தொடர்பான பல செயல்களைக் குறிப்பிட வைத்தார். என்எஸ் (NS) வரைபடம் அல்லது என்எஸ் வடிவங்கள் என்று இவை அழைக்கப்படுகின்றன. கணினி நிரல் தொடர்களுக்கான ஒடு படங்களை அமைப்பதற்கும் என்எஸ் வரை படங்கள் பயன்படுகின்றன.

NAT : நேட் : பிணைய முகவரி பெயர்ப்பு எனப் பொருள்படும்