பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/988

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

987


NDBMS 987 ΝΕC

அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

NDBMS : என்டிபிஎம்எஸ் : Network Database Management System என்பதன் குறும்பெயர்.

NDIS : என்டிஐஎஸ் : Network Driver Interface Specifications என்பதன் குறும்பெயர். தரவு இணைப்புப் பகுதி இயக்கிகள் தொடர்பில்லாத வன்பொருள் எழுதும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) விளக்கக் குறிப்பு. (ஊடக அணுகுமுறை அடுக்கு).

NDMP : என்டிஎம்பீ : பிணையத் தரவு மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Network Data Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணைய அடிப்படையிலான கோப்பு வழங்கன் கணினிகளுக்கான ஒரு திறந்த நிலை நெறிமுறை. பணித் தளம் சாரா தரவு சேமிப்பை அனுமதிக்கிறது.

NDRO என்டிஆர்ஒ : Non Destructive Readout என்பதன் குறும்பெயர்.

. ne : . என்இ : ஒர் இணைய தள முகவரி நைஜர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

near letter quality : ஏறக்குறைய எழுத்துத் தரம் : சில அச்சுப் பொறிகள் உருவாக்கும் வெளியீடு பற்றியது. எழுத்துத் தர அச்சுப்பொறியில் கிடைப்பதுபோல் புள்ளியணி (dot matrix) அச்சுப்பொறியில் எழுத்துகள் படிப்பதற்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

near leter quality printer : ஏறத்தாழ எழுத்துத் தரம் ஒத்த அச்சுப் பொறி.

near pointer : காட்டிக்கு அருகில் : இன்டெல் 80 x 86 பிரிக்கப்பட்ட முகவரியில் ஒரு தனி பிரிவுக்குள் (ஆஃப்செட்) உள்ள நினைவக முகவரி.

neat chipset : நீட்/சிப் செட் : Enhanedd at chipset என்பதன் குறும்பெயர். சிப்ஸ் அண்டு டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஏடி (AT) வகுப்பு எந்திரங்களை உருவாக்கப் பயன்படும் சிப்புகளின் தொகுதி. ஏஎம்எஸ் திறன் சேர்க்கப்பட்டது. 286-சார்ந்த பீசியின் அடிப்படை அளவை சிப்புகளாக சிபியு பயாஸ் மற்றும் நீட் (neat) சிப் செட்டுகளைக் கூறலாம்.

NEC : என்இசி : 1954ஆம் ஆண்டிலேயே கணினிகளை