பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

associated document

98

associative computer


பினைத் திறக்கும்போது, அக் கோப்பின் வகைப்பெயர் அடிப்படையில் குறிப்பிட்ட பயன்பாடு முதலில் இயக்கப் பட்டுப் பிறகு அந்தக் கோப்பு அந்தப் பயன்பாட்டினுள் திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் இயக்க முறைமையில் . doc என்னும் வகைப் பெயருள்ள கோப்புகளைத் திறக்க ஆணையிட்டால், முதலில் வேர்டு இயக்கப்பட்டு அதனுள் அக்கோப்பு திறக்கப்படுவதைக் காணலாம்.

associated document : இணைவு ஆவணம்.

Association for Computing Machinery (ACM) : கணினி எந்திரவியலார் சங்கம் : 1917ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவு மற்றும் தொழில்நுட்ப மேதமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் அமைக்கப்பட்டது.

Association for Systems Management (ASM) : முறைமை மேலாண்மைச் சங்கம் : முறைமை மேலாண்மை மற்றும் தகவல் செயலாக்கத் துறையில் விரைவாக ஏற்படும் வளர்ச்சி மாற்றம் ஆகியவற்றை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தலில் ஈடுபடும் பன்னாட்டுச் சங்கம். 1947இல் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. அது ஐந்து தொழில் நுணுக்கப் பகுதிகளைக் கொண்டது. தரவுப் பரிமாற்றம், தரவு செயலாக்க மேலாண்மை, தரவு முறைமை, முறைமைக்குத் திட்டமிடல் மற்றும் எழுத்து மூலமான தகவல் பரிமாற்றம். உறுப்பினர்கள் இப்பிரிவுகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

Association of C and C++ users : சி மற்றும் சி++ பயனாளர்கள் சங்கம் : கணினி நிரலாக்க மொழிகளான சி, சி++ மற்றும் அவற்றின் உறவு மொழிகளில் ஆர்வமுள்ளவர்களின் சங்க அமைப்பு. இம்மொழிகளின் தொழில்முறை நிரல் வரைவாளர்கள், இவற்றின் மொழி மாற்றிகளை (compilers) உருவாக்கும்/விற்பனை செய்யும் வணிகர்கள், தொழில் முறை அல்லாத நிரல் வரைவு ஆர்வலர்கள் ஆகியோர் இச்சங்க உறுப்பினர்கள்.

associative array : சார்புக் கோவை : கணினி பெர்ல் (perl) மொழியில் ஒரு தரவு இனம்.

associative computer : சார்புக்கணினி : சார்பு நினைவகத்தைக் கொண்ட கணினி.