பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/995

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

994


network

994

network charts

network : பிணையம் : கட்டமைப்பு : 1. ஒன்றோடொன்று பிணைந்த கணினி அமைப்புகள் மற்றும் முனையங்கள். 2. தரவுத் தொடர்பு வழித் தடங்களில் பிணைக்கப்பட்டுள்ள தொடர் முனைகள். 3. ஒரு திட்ட நடவடிக்கைகள் பணிகள் நிகழ்வு களுக்கிடையே உள்ள அமைப்பு உறவு.

network adapter : பிணையப் பொருத்தி, பிணைய ஏற்பி : ஒரு பணி நிலையம் அல்லது பணியகத்தைப் பிணைத்து ஒரு கட்டமைப்பில் தரவுப் பரிமாறிக்கொள்ள உதவும் அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டை, ஈதர்நெட், டோக்கன் ரிங் மற்றும் லோக்கல் டாக் போன்ற அணுகுமுறை தரவுப் பிணைப்பு நெறிமுறை (Protocol) யின் மின்னணுப் பணிகளை இது நிறைவேற்றுகிறது. அனுப்பும் ஊடகம் (முறுக்கிய பிணை கூட்டிணைப்பு அல்லது ஒளி இழைக் கம்பி) பிணையத்திலுள்ள அனைத்து பொருத்திகளுக்கிடையில் நேரடி பிணைப்பு ஏற்படுத்தும்.

network adminstrator : பிணைய நிர்வாகி : ஒரு தரவுத் தொடர்பு பிணையத்தைப் பராமரித்து அதன் திறமையான இயக்கத்துக்குக் காரணமாக இருப்பவர். புதிய பயன்பாடுகளை நிறுவுதல் பிணைய நட வடிக்கையைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும்.

network analysis : பிணைய ஆய்வு ; பிணையப் பகுப்பாய்வு : ஒரு திட்டக் கட்டமைப்பின் பகுதிகளைப் பட்டியலிடல். இதில் ஆரம்பம், முடிவு தேதிகள், ஒட்டம் மற்றும் சார்பு நெறி முறைகளைக் குறிப்பிடலாம்.

network architecture : பிணையக் கட்டமைப்பு : ஒரு தகவல் தொடர்பு அமைப்பை வடிவமைத்தல். இதில் வன்பொருள், மென்பொருள், அணுகுமுறைகள் மற்றும் பயன்படுத்தும் வரைமுறைகளும் உள்ளடங்கும். கணினிகள் சுயேச்சையாக இயங்கலாமா அல்லது பிணையத்தைக் கண்காணிக்கும் பிற கணினிகளால் கட்டுப்படுத்தப்படலாமா என்னும் அணுகுமுறையை அது வரையறுக்கிறது. அயல் பிணையத்துடன் எதிர்கால அணுசரிப்பு மற்றும் பிணைப்புத் தன்மை ஆகியவற்றை இது முடிவு செய்கிறது. network card : பிணைய அட்டை

network charts : பிணைய வரைபடங்கள் : கால மதிப்பீடுகள் மற்றும் நடவடிக்கை உறவுகளைக் கூறும் வரைபடங்கள்.