பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cpoy, soft

118

CPSR


copy, soft : மென்நகல், வட்டு நகல்.

copydisk : காப்பிடிஸ்க் : ஒரு நெகிழ் வட்டிலுள்ள தகவல்களை இன்னொரு நெகிழ்வட்டில் பதிவதற்கான எம்எஸ் டாஸ் கட்டளை.

CORBA : கோர்பா : பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992ஆம் ஆண்டில் பொருள் மேலாண்மைக் குழு உருவாக்கித் தந்த வரன்முறைகள் ஆகும். வெவ்வேறு பணித்தளங்களில் செயல்படும் இரு நிரல்களில் உருவாக்கப் பட்டுள்ள வெவ்வேறு பொருள்கூறு கள் தமக்குள்ளே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும். ஒரு நிரல், ஒரு பொருள் கோரிக்கை முகவர் (ORB) மூலமாக ஒரு பொருள்கூறின் சேவைக்கான கோரிக்கையை முன் வைக்கும். அந்தப் பொருள்களை உள்ளடக்கிய நிரலின் கட்டமைப்பு எப்படிப்பட்டது என்பதை அறிந்திருக்க வேண்டிய தேவை இல்லை. கோர்பா, ஒரு பொருள்நோக்கு பணிச் சூழலுக்கென வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும்.

core, bistable magnetic : இருநிலை காந்த உள்ளகம்.

core ferrite : இரும்பு உள்ளகம்.

core magnetic : காந்த உள்ளகம்.

core programme : உள்ளக நிரல் : குறிப்பிலா அணுகு நினைவகத்தில் (Random Access Memory) தங்கியிருக்கும் ஒரு நிரல் அல்லது நிரலின் ஒரு பகுதி.

cordless telephone : கம்பியில்லாத் தொலைபேசி.

coresident : உடன்தங்கல் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கள் ஒரே நேரத்தில் நினைவகத்தில் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையைக் குறிக்கிறது.

core store. : உள்ளக சேமிப்பு.

corona wire : மின்னுமிழ்வுக் கம்பி : லேசர் அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒர் இணைப்புக் கம்பி. காற்றை அயனியாக்க இதன் வழியாக உயர் மின்னழுத்தம் பாய்ச்சப்படுகிறது. அதன்மூலம் ஒரே சீரான நிலைமின்னூட்டம் ஓர் ஒளியுணர் ஊடகத்துக்கு மாற்றப்பட்டு லேசர் கதிர் உருவாக்கப்படுகிறது.

corporates : நிறுமங்கள்.

correction : திருத்தம்.

corrective : பழுது நீக்கல்.

country code : நாட்டுக் குறிமுறை.

count, record : ஏட்டு எண்ணிக்கை.

counter, binary : இரும எண்ணி.

counter, control : கட்டுப்பாட்டு எண்ணி.

counter, ring : வளைய எண்ணி.

counter, step : படி எண்ணி.

coupler, acoustic : கேட்பொலி பிணைப்பி.

course details : பாடத்திட்ட விவரம்; பாடத் திட்டம்.

CPSR : சிபீஎஸ்ஆர் : சமூகப் பொறுப்புணர்வுமிக்க கணினி இயலாளர் எனப் பொருள்படும் Computer Professionals for Social Responsability என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினித் தொழில்நுட்பம் இராணுவத் தேவை