பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cross - hatching

121

cs

Cross-hatching :குறுக்குப்பின்னலிடல் :ஒரு வரைகலைப்படத்தின் பரப்பை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் பல வழிமுறைகளில் இதுவும் ஒன்று. ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளும் நிலையான இடை கோடுகளினால் ஆன நிழலிடு முறை.

cross - linked files :மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்புகள்: எம்எஸ்டாஸ், விண்டோஸ் 3.x, விண் டோஸ் 95 ஆகியவற்றில் ஏற்படும் கோப்புச் சேமிப்புப் பிழை. ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டிலுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுப் பிரிவு அல்லது கொத்துப் பகுதி, கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளுக்கு ஒதுக்கப்படுவதால் ஏற்படுவது. காணாமல் போன கொத்துகளைப் போலவே மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்புகளினாலும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு இயங்கிக் கொண்டிருக்கும்போதே நட்ட நடுவில் நின்று போகும்.

cross - platform: பல்பணித் தளத்தது , குறுக்குப் பணித்தளத்தது. மாற்றுப் பணித்தளத்தது : ஒன்றுக்கு மேற்பட்ட பணித்தளங்களில் இயங்கக்கூடிய ஒரு மென்பொருள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணினி அமைப்பில் இணைத்து இயக்கக்கூடிய ஒரு வன்பொருள் சாதனம்.

cross - post :குறுக்கு அஞ்சல்; மாற்று அஞ்சல் : ஒரு செய்திக் குழுவில் உள்ள ஒரு கட்டுரையை அல்லது செய்தியை, ஒரு மின்னஞ்சல் அமைப்பில் உள்ள ஒரு மடலை இன்னொரு மின்னஞ்சல்/செய்திக் குழுவில் நகலெடுப்பது. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் செய்திக்குழுவிலிருந்து ஒரு காம்புசெர்வ் குழுவுக்குச் செய்தியை மாற்றுவது. அல்லது ஒரு மின்னஞ்சலை வேறொரு செய்திக் குழுவுக்கு அனுப்பி வைப்பது.

cross - reference :மாற்றுக்குறிப்பு .

CRT controller :சிஆர்டி கட்டுப்படுத்தி : ஒர் ஒளிக்காட்சி தகவிப் பலகையின் ஒரு பகுதியாக இருப்பது. இதுதான் ஒளிக்காட்சி சமிக்கைகளை இயற்றுகிறது. கிடைமட்ட, செங்குத்து ஒத்திசைவுச் சமிக்கைகளையும் சேர்த்தே உருவாக்குகிறது.

cryptography : மறைக்குறியீட்டியல்.

crystal 3D : முப்பரிமாணப் படிகம்.

Crystal Report : கிறிஸ்டல் ரிப்போர்ட்; தரவுத் தளங்களிலுள்ள தகவல்களில் அடிப்படையில் அறிக்கை தயாரிக்க உதவும் ஒரு மென்பொருள், விசுவல் பேசிக்கில் பெரும்பாலும் பயன் படுத்தப்படுகிறது.

cs : .சி.எஸ் : செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதை அடையாளம் காட்டும், பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.