பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

D

126

database structure


D

daily cycle : நாட் சுழற்சி.

daisy printer : டெய்தி அச்சுப்பொறி.

darkest : மிகு இருள்மை.

dark fiber : கறுப்பு ஒளியிழை; கரு ஒளியிழை : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ஒளியிழை வடங்களில் பயன்பாட்டில் இல்லாத இழைகளை கறுப்பு ஒளியிழை என்றழைப்பர்.

D/A (Digital to Analog) : இலக்க முறையிலிருந்து தொடர்முறைக்கு.

DAM (Direct Memory Access) : டிஏஎம் - நேரடி நினைவக அணுகல்.

DARPAnet: டார்ப்பாநெட் : அமெரிக்காவின் பாதுகாப்பு உயர்நிலை ஆராய்ச்சித் திட்டப்பணி முகமை எனப் பொருள்படும் Defense Advanced Research Projects Agency என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

dash style : கீறுகோட்டுப் பாணி.

data abstract : தரவுப் சுருக்கம்.

data administration : தகவல் நிர்வாகம்.

data analysis : தரவுப் பகுப்பாய்வு.

data attribute : தரவின் பண்புக் கூறு; விவரத்தின் பண்பியல்பு : ஒரு தரவின் இடம், பொருள், ஏவல் பற்றிய கட்டமைப்பு விவரங்கள்.

database concept: தரவுத்தள பிரிப்பி.

data base broadcasting : தரவுத் தள அலைபரப்பு.

data base design : தரவுத்தள வடிவமைப்பு.

database designer : தரவுத்தள வடிவமைப்பாளர்; தரவுத் தள திட்ட அமைப்பாளர்: ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர்.

database engine: தரவுத்தளப் பொறி; தரவுத் தள இயக்கக் கருவி : ஒரு தரவுத் தள மேலாண் அமைப்பை அணுகித் தகவல்களை எடுத்தாள வழியமைத்துக் கொடுக்கும் ஆணைத் தொகுதிகளைக் கொண்ட மென்பொருள்.

data base objects : தரவுத்தளச் செயல்பாடு.

data base operation : தரவுத் தளப் பண்புகள்.

database publishing : தரவுத்தள வெளியீடு; தரவுத் தளப் பிரசுரம்; தகவல் தள அறிக்கை : ஒரு தரவுத் தளத்திலுள்ள விவரங்களைத் திரட்டி அறிக்கையாகத் தயாரித்து, கணினிப் பதிப்பக முறையில் (Desk Top Publishing) அல்லது இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் வெளியிடும் முறை.

data base splitter : தரவுத்தள பிரிப்பி.

database structure : தரவுத்தள கட்டமைப்பு : தரவுத்தள வடிவமைப்பு : ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர், தரவு இனம் (data type) இவற்றைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய வடிவமைப்பு பற்றிய பொதுவான விளக்கக் குறிப்பு.