பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dimensional storage, two

144

dir

ஆனால் இவற்றின் இனக்குழுக்கள் (Classes) நிலைநிரல் (Hard code) கொண்டது. பயனாளர் தாம் விரும்பியவாறு மாற்றியமைக்க முடியாது. இந்த மென்பொருளுக்கு உரிமம் பெற்றவர்கள் பணத்துக்காக இதனை விற்பனை செய்ய முடியாது. 2. டிக்குமட் மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கணினி விளையாட்டும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது.


dimensional storage, two : இரு பரிமாணச் சேமிப்பு.


dimensional, multi பன்முகப் பரிமாணம், பல் பரிமாணம்.


dimensioning : பரிமாணமாக்கல்.


dimmed : மங்கிய தேர்வு; மறுக்கப் பட்ட : வரைகலைப் பணித்தளத்தில் நாம் நிறைவேற்ற விரும்பும் பணிகளை பட்டியலுள்ள தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து இயக்க வேண்டும். சில சூழ்நிலைகளில் சில பட்டியல் தேர்வுகள் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு எழுத்தில் இல்லாமல் மங்கிய சாம்பல் நிறத்தில் இருக்கும். கருப்புப் பின்புலத்திலுள்ள வெள்ளை எழுத்துகளும் மங்கிய நிலையில் இருக்கும். இவற்றைப் பயனாளர் தேர்வு செய்ய முடியாது. எடுத்துக்காட்டாக, சொல் செயலித் தொகுப்புகளில், உரைப்பகுதி எதையும் தேர்வு செய்யாத போது Cut, Copy என்ற விருப்பத் தேர்வுகள் மங்கிய நிலையில் இருக்கும். அதேபோல, ஏற்கெனவே ஒரு பகுதியை வெட்டியோ (Cut), நகலெடுத்தோ (Copy), இடைச் சேமிப்புப் பலகை (Clip Board)-யில் வைத்திராதபோது Paste என்னும் பட்டியல் தேர்வு மங்கலாக இருக்கும்.


DIN connector : டின் இணைப்பான்; டின் இணைப்பி : ஜெர்மன் தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்


டின் இணைப்பி


(Deutsch Industries Norm - DIN) வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு இசைந்து உருவாக்கப்பட்ட பல்லூசி இணைப்பான். கணினியின் பல்வேறு உறுப்புகளை இணைப்பதற்கு டின் இணைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.


diode transistor logic : டயோடு டிரான்சிஸ்டர் லாஜிக்; இருமுனைய மின்மப்பெருக்கி இணைப்புமுறை : ஒருதிசை இருமுனையம், மின்மப் பெருக்கி மற்றும் மின்தடுப்பி ஆகிய உறுப்புகளைக் கொண்ட ஒருவகை மின்சுற்று வடிவாக்கம். தருக்கமுறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது.


diogonal : மூலைவிட்டம்.


dipole : இருதுருவம் : சிறிய இடை வெளியால் பிரிக்கப்பட்டுள்ள நேர்-எதிர் மின்செறிவுகள். இரு வேறு எதிரெதிர் காந்தத் துருவங்கள்.


dir : (டிர்) : டாஸ் இயக்கமுறைமையில் உள்ள கட்டளை. இக்கட்டளை இருப்புக் கோப்பகம் அல்லது கோப்புறையிலுள்ள கோப்புகள் மற்றும் உள்கோப்பகங்களின் பட்டியலைத் திரையில் காட்டும். ஒரு குறிப்பிட்ட கோப்பக அல்லது உள்கோப்பகத்தின் உள்ளடக்கத்தை