பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

domain name server

154

double density disk


கணினியின் முகவரி. குறிப்பாக, ஒரு வழங்கன் கணினியை அல்லது நிறுவனத்தை அடையாளம் காண, எண்களுக்குப் பதிலாக சொற்களை முகவரியாகப் பயன்படுத்தும் முறை.

domain name server:.களப்பெயர் வழங்கன்.

domain name system : களப்பெயர் முறைமை.

Domain Naming Services (DNS) : களப் பெயரிடு சேவை.

domestíc computer:வீட்டுக் கணினி.

dongle : வன்பூட்டு.

doping vector : மாசு நெறியம்; மாசு திசையம்.

DOS box : டாஸ் பெட்டி : ஓ.எஸ்/2 இயக்க முறைமையில், எம்எஸ் டாஸ் நிரல்களை இயக்குவதற்குத் துணைபுரியும் ஒரு செயலாக்கம்.

DOS extender : டாஸ் நீட்டிப்பான் : டாஸ் இயக்க முறைமையில் டாஸ் பயன்பாட்டு நிரல்கள் பயன்படுத்திக் கொள்ள, 640 கேபி மரபு நினைவகத்தை நீட்டிப்பதற்காக உருவாக்கப் பட்ட நிரல். ஒளிக்காட்சி தகவி, ரோம் பயாஸ், உ/வெ துறைகள்போன்ற கணினி உறுப்புகளுக்காக ஒதுக்கப் பட்ட நினைவகத்தை டாஸ் நீட்டிப்பான் பயன்படுத்திக்கொள்ளும்.

DOS prompt : டாஸ் தூண்டி : எம்எஸ் -டாஸ் இயக்க முறைமையில், பயனாளரின் கட்டளையை ஏற்கத் தயாராக இருக்கும் நிலையை உணர்த்தும் அடையாளச் சின்னம், டாஸின் கட்டளைச் செயலி இதனை வழங்குகிறது. பெரும்பாலும் இச் சின்னம் இருப்பு வட்டகம்/கோப்பகத்தைச் சுட்டுவதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, A:\>, C:\-,


D:DBASE> என்பதுபோல இருக்கும். பயனாளர், தன் விருப்பப்படி இச்சின்னத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். Prompt என்ற கட்டளை அதற்குப் பயன்படுகிறது.

dot : டாட், புள்ளி : 1. யூனிக்ஸ், எம்எஸ்-டாஸ், ஓஎஸ்/2 போன்ற இயக்க முறைமைகளில் கோப்பின் முதற்பெயரையும், வகைப்பெயரையும் பிரிக்கும் குறியீடு. (எ-டு) text.doc. இதனை டெக்ஸ் டாட் -டாக் என்று வாசிக்க வேண்டும். 2. கணினி வரைகலையிலும் அச்சடிப்பிலும் புள்ளிகள்தாம் ஒரு படத்தையோ எழுத்தையோ உருவாக்குகின்றன. கணினித் திரையில் காணப்படும் உருவப்படங்கள் புள்ளிகளால் ஆனவையே அவை படப்புள்ளிகள் (pixels-picture elements) எனப்படுக்கின்றன. அச்சுப்பொறியின் திறன் ஓர் அங்குலத்தில் எத்தனைப் புள்ளிகள் (dots per inch - dpi) குறிக்கப்படுகிறது. 3. இணைய தள முகவரியின் வெவ்வேறு பகுதிகளை புள்ளிகளே பிரிக்கின்றன. (எ-டு) www.vsnl.com.

dot operator : புள்ளி செயற்குறி.

dot per inch : ஓர் அங்குளத்தில் புள்ளிகள்.

double density disk : இரட்டை அடர்த்தி வட்டு;இரட்டைச் செறிவு வட்டு; இரட்டைக் கொள்திறன் வட்டு: முந்தைய வட்டுகளைப்போல் இரண்டு மடங்கு கொள்திறன் (ஓர் அங்குலப் பரப்பில் கொள்ளும் துண்மிகள்) உள்ள வட்டுகள். முற்கால ஐபிஎம் பீசியில் பயன்படுத்தப்பட்ட நெகிழ்வட்டுகளின் கொள்திறன் 180 கேபி. இரட்டைக் கொள்திறன் வட்டுகளில் 360 கேபி தகவலைப் பதியலாம். இவ் வட்டு