பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

J

252

java applet



J

J : ஜே : ஒர் உயர்நிலை கணினி நிரலாக்க மொழி. ஏ.பீ.எல் (APL) என்னும் கணினி மொழியை உருவாக்கிய கென்னத் இவர்சன் (Kenneth Iverson) உருவாக்கிய மொழி இது. ஜே., ஏ.பீ.எல்லின் அடியொற்றிய மொழி. ஏ.பீ.எல் போலவே டாஸ், விண்டோஸ், ஒஎஸ்/2 மற்றும் மெக்கின்டோஷ் பணித்தளங்களில் செயல்பட வல்லது. ஜெ மொழியைப் பெரும்பாலும் கணித வல்லுநர்களே பயன்படுத்துகின்றனர்.

jabber , பிதற்றல்; உளறல் : செயல் பாட்டில் ஏற்பட்ட ஏதோ குறைபாடு காரணமாக, ஒரு பிணையத்தில் தொடர்வோட்டமாய் அனுப்பிவைக்கப்படும் முறைமையற்ற தகவல் கூறுகள்.

jack in : நுழை முளை, முளை நுழை; புகு முளை, முளை புகு : 1. ஒரு கணினி முறைமையில் பயனாளர் ஒருவர் நுழைபெயர் மற்றும் நுழை சொல் (password) தந்து நுழைதலைக் குறிக்கும். 2. ஒரு பிணையத்தில் பயனாளர் தன் கணினியைப் பிணைத்துக் கொள்ளுதலையும் குறிக்கும். பெரும்பாலும் இணைய தொடர் அரட்டை (Internet Relay Chat) அல்லது மெய்நிகர் நடப்புப் பாவனைகளில் (Virtual Reality Simulations) பயனாளர் தம்மை நுழைத்துக் கொள்வதைக் குறிக்கும். தொடர்பினைத் துண்டித்துக் கொள்வது, jack out (முளைவிடு/ விடுமுளை) எனப்படும்.

jam : நெரிசல்,

janet : ஜேநெட் : கூட்டுக் கலைக் கழகப் பிணையம் என்று பொருள்படும் Joint Academic Network என்பதன் சுருக்கம். இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் முதன்மை முதுகெலும்புப் பிணையமாகச் செயல்படக் கூடிய ஒரு விரிபரப்புப் பிணையம் (Wide Area Network).

java applet: ஜாவா குறுநிரல்: ஜாவா மொழியில் இருவகையான நிரல்கள் உருவாக்கப்படுகின்றன. ஒன்று பயன் நிரல் (Application). மற்றது குறுநிரல் (Applet). இது ஒரு ஜாவா இனக் குழு (class). ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஜாவா பயன்பாட்டுத் தொகுப்பு. இந்த ஜாவா இனக்குழுவினை தன்னுள் ஏற்றிக்கொண்டு அதிலுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. இணைய உலாவி, குறுநிரல் நோக்கி ஆகியவை குறு நிரல்களை ஏற்றி இயக்க வல்லவை. எடுத்துக்காட்டாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், நெட்ஸ்கேப் நேவிக் கேட்டர், ஹாட் ஜாவா போன்ற இணைய உலாவிகள் ஜாவா குறு நிரல்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இயக்கும் திறன் பெற்றவை. ஜாவா குறுநிரல்கள் பெரும்பாலும் ஒரு வலைப்பக்கத்தின் பல்லூடக (பின்னணி இசை, நிகழ்நேர ஒளிக்காட்சிப் படம், அசைவூட்டங்கள், கணக்கீடுகள் மற்றும் ஊடாடு விளையாட்டுகள்) விளைவுகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பயனாளரின் தலையீடின்றி தாமாகவே இயங்கும்படி குறுநிரல்களை அமைக்க முடியும். அல்லது வலைப் பக்கத்திலுள்ள சின்னத்தின் மீது சுட்டியால் சொடுக்கும்போது இயங் கும் படியும் குறுநிரலை அமைக்கலாம்.