பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

java application

253

java terminal



java application : ஜாவா பயன்பாடு; ஜாவா பயன்நிரல்.

JavaBean: ஜாவாபீன் : ஜாவா அடிப்படையிலான ஒரு மென் பொருள் நுட்பம்.

java chip : ஜாவா சிப்பு; ஜாவா சில்லு : ஜாவா மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை ஜாவா மெய்நிகர் பொறி (Java Virtual Machine - JVM) என்னும் ஆணைமாற்றி (Interpreter) செயல் படுத்துகிறது. ஜேவிஎம் செய்யும் பணியை நிறைவேற்றும் வகையில் ஒரு சிப்புவை - ஒரு நுண்செயலியை - வடிவமைக்க முடியும். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் இத்தகைய சிப்புவை உருவாக்கியுள்ளது. இந்த சிப்புவை மிகச் சிறிய சாதனங்களில் கட்டுப்படுத்திகளாகப் பயன்படுத்த முடியும்.

java-compliant browser : ஜாவா இணக்க உலாவி : ஜாவா மொழியில் எழுதப்பட்ட நிரலை ஏற்று இயக்கும் திறனுள்ள ஒர் இணைய உலாவி. தற்கால இணைய உலாவிகள் பலவும் ஜாவா இணக்கம் உள்ளவையே.

java database connectivity (JDBC) : ஜாவா தரவு இணைப்பாக்கம்.

Java Developer's Kit (JDK) : ஜாவா உருவாக்கக் கருவித் தொகுதி : சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருள் கருவிகளின் தொகுப்பு. ஜாவா பயன்நிரல்களையும் குறுநிரல்களையும் உருவாக்க உதவுபவை. இத் தொகுப்பு, ஜாவா மொழி மாற்றி, ஆணைமாற்றி, பிழைதிருத்தி, குறுநிரல் நோக்கி மற்றும் ஆவணமாக்கிகளை உள்ளடக்கியது. இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.

Java Management Application Programming Interface : ஜாவா மேலாண்மை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்; ஜாவா மேலாண்மை பீஐ: பயன்பாட்டு நிரலாக்க இடை முகத்துக்கான வரையறுப்புகளின் தொகுப்பு. பிணைய மேலாண்மைக்கு, ஜாவா மொழியை ஏதுவாக்க சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் இவ்வரையறுப்புகளை முன்வைத்துள்ளது.

Java Script : ஜாவா ஸ்கிரிப்ட்: ஒரு கணினி உரைநிரல் மொழி. இணை யப் பக்கங்களை சிறந்த முறையில் வடிவமைக்கப்படுகிறது. நெட்ஸ் கேப் நிறுவனம் உருவாக்கியது.

Java Soft : ஜாவா சாஃப்ட் : ஒரு கணினி நிறுவனம்.

java terminal : ஜாவா முனையம் : இணையத்தில் இணைத்து இயக்குவதற்கென்றே குறைவான சாதனங்களுடன் உருவாக்கப்பட்ட ஒரு வகை சொந்தக் கணினி. ஜாவா குறுநிரல்களை பதிவிறக்கம் செய்து இயக்கவல்லவை. இக் கணினிகளில் வட்டுச் சேமிப்பகங்கள் கிடையா. நிறுவப்பட்ட நிரல்களும் கிடையா. எத்தகைய பயன்பாட்டு நிரல்களையும் பிணையத்திலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும். தேவையான நிரல்களை ஒரு கணினியில் மையப்படுத்தி சேமித்துவைத்து, இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொள்வதனால் செலவு குறைவாகிறது. அதேவேளை, ஒவ்வொரு நிரலையும் இறக்குமதி செய்து பயன்படுத்துவதால் சிறிது காலத் தாழ்வு தவிர்க்க முடியாதது. சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் ஜாவா முனையங்களை விரைவில் வெளியிட எண்ணியுள்ளது. பிணைய