பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

send to

406

serial infrared


send to : இவருக்கு அனுப்பு.

send to back : திருப்பி அனுப்பு.

sense wire : உணர்வுக் கம்பி.

sensor glove : உணரிக் கையுறை : மெய்நிகர் நடப்புச் சூழல்களுக்கு, கையில் அணிந்துகொள்ளும் கணினி உள்ளீட்டுச் சாதனம். பயனாளரின் கைவிரல் அசைவுகளை இந்தக் கையுறை, சுற்றுச் சூழல் இருக்கும் பொருள்களை இயக்குவதற்குரிய கட்டளைகளாக மாற்றியமைக்கும். தரவுக் கையுறை (data glove) என்றும் அழைக்கப்படும்.

SEPP : எஸ்இபீபீ : இணைநிலைச் செயலாக்கத்துக்கான மென்பொருள் பொறியியல் எனப் பொருள்படும் Software Engineering for Parallel Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பகிர்ந்தமை நினைவக பல்செயலிகளுக்கான இணைநிலைப் பயன்பாட்டு நிரல்களை உருவாக்குவதற்குரிய கருவிகளை உருவாக்க, ஒன்பது ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்ட ஒரு திட்டப்பணி.

sequence character: தொடர் எழுத்து.

sequential : வரிசை முறை.

sequential algorithm: வரிசைமுறைப் படிமுறைத் தருக்கம் : நிரலின் ஒவ்வொரு படிமுறையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம்பெறும்படி முறைத் தருக்கம்.

sequential file, index : சுட்டுவரிசைக் கோப்பு.

sequential execution : வரிசைமுறை இயக்கம் : நிரல்கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறைவேற்றுதல்.

sequential logic element : வரிசைமுறைத் தருக்க உறுப்பு : குறைந்த அளவாக ஒரு உள்ளீடு, ஒரு வெளியீடு மட்டுமாவது உள்ள ஒரு தருக்க மின்சுற்று உறுப்பு. இதன் வெளியீட்டு சமிக்கை, உள்ளீட்டு சமிக்கை அல்லது சமிக்கைகளின் இப்போதைய மற்றும் முந்தைய நிலைகளின் அடிப்படையில் இருக்கும்.

serial communication : நேரியல் தகவல்தொடர்பு : இரு கணினிகளுக்கிடையே அல்லது ஒரு கணினிக்கும் பிற புறச்சாதனங்களுக்கும் இடையே நடைபெறும் தகவல் போக்குவரத்தில் ஒற்றைத் தடத்தில் ஒரு நேரத்தில் ஒரு துண்மி(பிட்) வீதம் தகவல் பரிமாற்றம் நடைபெறல். இத்தகைய தகவல் தொடர்பு நேர ஒத்திசைவு அல்லது ஒத்திசைவில்லா முறையில் நடைபெற முடியும். அனுப்பி, வாங்கி இரண்டுமே ஒரே பாட் (baud) வீதம், ஒரே சமன்பிட், ஒரே வகையான கட்டுப்பாட்டுத் தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும்.

serial infrared: நேரியல் அகச்சிவப்பு : ஒர் அகச்சிவப்பு ஒளிக்கற்றையைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் இடைவெளியில் உள்ள இரு சாதனங்களுக்கிடையே தகவல்களை அனுப்பிக் கொள்ள, ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் உருவாக்கிய ஒரு வழிமுறை. அனுப்பும், பெறும் சாதனங்களில் இருக்கும் துறைகள் (ports) ஒரு சீராக்கப்பட்டிருக்க வேண்டும் (aligned). இத்தகு அகச்சிவப்பு ஒளிக்கற்றை முறை பெரும்பாலும் மடிக்கணினிகளில், கையேட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன.