பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sideband

413

silicon-controlled rectifier


sideband : பக்கக்கற்றை; ஓரக்கற்றை: பண்பேற்றப்பட்ட சுமப்பி அலைக்கற்றையின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதி. இருபகுதிகளும் வெவ்வேறு தகவலைச் சுமந்துசெல்லுமாறு செய்ய முடியும். இதன் காரணமாய் ஒற்றைத் தடத்தில் இரண்டு மடங்கு தகவலைச் சுமந்து செல்ல முடியும்.

sidebar: பக்கப் பட்டை; ஓரப்பட்டை : ஒர் ஆவணத்தில் முதன்மையான உரைப்பகுதிக்கு பக்கவாட்டில் இடம்பெறும் உரைத்தொகுதி. பெரும்பாலும் ஒரு வரைகலைப் படம் அல்லது கரைமூலம் பிரிக்கப்பட்டிருக்கும்.

side head : பக்கத் தலைப்பு; ஓரத் தலைப்பு : ஒர் அச்சு ஆவணத்தின் இடப்புற ஒரப்பகுதியில் (margin) உரையின் உடல்பகுதியின் மேற்பகுதியோடு கிடைமட்ட சீரமைவாக இருக்கும் தலைப்பு. உரைப் பகுதிக்கு செங்குத்துச் சீரமைவாக இருப்பது இயல்பான தலைப்பாகும்.

sided, double : இருபக்க.

sided, single : ஒருபக்க.

Sieve of Eratosthenes : ஏரட்டோஸ்தீன்ஸின் சல்லடை : பகா எண் ளைக் கண்டறிவதற்கான ஒரு தருக்கமுறை. ஒரு கணினியின் அல்லது ஒரு மொழியில் படிமுறைத் தருக்கத்தில் எழுதப்பட்ட ஒரு நிரலின் வேகத்தைக் கண்டறியும் அளவுகோலாக இது பயன்படுத்தப்படுகிறது.

.sig : .சிக்; .எஸ்ஐஜி : மின்னஞ்சல் அல்லது இணையச் செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்படும் ஒப்பக் கோப்புகளின் வகைப்பெயர் (Extension). இந்தக் கோப்பின் உள்ளடக்கம், மின்னஞ்சல் மடல் அல்லது செய்திக்குழுக் கட்டுரையின் இறுதியில் அவற்றுக்குரிய கிளையன் மென்பொருள்களால் தாமாகவே சேர்க்கப்பட்டுவிடும்.

sigel density : தனிச் செறிவு.

SIGGRAPH : சிக்வரைகலை; சிக்கிராஃப் : கணினி வரைகலைக்கான சிறப்பு ஆர்வலர் குழு எனப்பொருள்படும் Special Interest Group on Computer Graphics என்ற தொடரின் சுருக்கம். கணிப்பணி எந்திரச் சங்கத்தின் (Association for Computing) ஓர் அங்கம்.

signature : ஒப்பம்; கையொப்பம்; குறியீட்டெண்.

signature block : ஒப்பத் தொகுதி : ஒரு மின்னஞ்சல் செய்திக் கட்டுரை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகக் கடிதத்தின் இறுதியில், அஞ்சல் கிளையன் மென்பொருளினால் தானாகவே சேர்க்கப்படும் உரைப் பகுதி. ஒப்பத் தொகுதியில் பெரும்பாலும் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் அச்செய்தியை/கட்டுரையை ஆக்கியோரை அடையாளங்காட்டும் குறிப்புகள் அடங்கியிருக்கும்.

signature capture : கையெழுத்து கவர்வு.

significance : முகமையான.

significant character, least : குறைமதிப்பு எழுத்து.

silabi structure : அசை பிரித்தல்.

silicon-controlled rectifier : சிலிக்கான் கட்டுப்பாட்டு மின்திருத்தி : ஒரு வாயில் (gate) சமிக்கை மூலம் மின் கடத்து திறனைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு குறைகடத்தி மின் திருத்தி.