பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

UMA

458

undernet


வரன்முறை. வேக ஸ்கஸ்ஸியின் பரிமாற்ற வீதத்தைப் போல இரண்டு மடங்கு வேகம் கொண்டது. 8-பிட் இணைப்பில் வினாடிக்கு 20 மெகாபைட் வீதமும், 16-பிட் இணைப்பில் 40 மெகாபைட் வீதமும் அனுப்பும் திறன் கொண்டது.

UMA : யுஎம்ஏ : மேல்நிலை நினைவகப் பரப்பு எனப்பொருள் Upper Memory Area என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டாஸ் இயக்க முறைமையில், 640கே தொடங்கி 1 மெகாபைட் வரையிலான நினைவகப் பகுதி.

UMB : யுஎம்பி ; மேல்நிலை நினைவகத் தொகுதி என்று பொருள்படும் Upper Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். யுஎம்ஏ நினைவகப் பரப்பில், சாதன இயக்கி அல்லது நினைவகத்தில் தங்கிச் செயல்படும் (TSR) நிரல்களுக்காகப் பயன்படுத்தப்படும் நினைவகத் தொகுதி. EMM386.EXE போன்ற தனிச்சிறப்பான நினைவக மேலாண்மை நிரல்களால் இத்தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

unbuffered : இடையகமற்ற : பெற்ற தகவல்களை இடைநிலை நினைவகத்தில் சேமித்துவைத்துப் பிறகு செயலாக்குவதற்குப் பதிலாக, பெற்றவுடனேயே செயலாக்கத்துக்கு உட்படுத்திவிடுகிற தன்மையைக் குறிக்கிறது.

unbundle : கட்டுப்பிரித்தல் : ஒரு மென்பொருள் கூட்டுத் தொகுப்பை மொத்தமாக விற்பதற்குப் பதில் அதிலுள்ள மென்பொருள் கூறுகளை தனித்தனியே பிரித்து விற்பனை செய்தல், (எ-டு) எம்எஸ்ஆஃபீஸ் தொகுப்பினுள் வேர்டு, எக்ஸெல், அக்செஸ் போன்றவற்றைத் தனித் தனியே விற்பனை செய்தல்.

uncompress : விரித்துப் பெருக்குதல்: இறுக்கிச் சுருக்கப்பட்ட (compressed) கோப்பினை விரித்துப் பெருக்கி மூலக் கோப்பினைப் பெறுதல்.

unconditional branch instruction : நிபந்தனையற்ற கிளைபிரி ஆணை.

undeliverable : சேர்ப்பிக்க முடியாத : வினியோகிக்க முடியாத : தகவலைப் பெறவேண்டியவரிடம் சேர்ப்பிக்க முடியாத நிலை. ஒரு மின்னஞ்சலை முகவரிதாரருக்குச் சேர்ப்பிக்க முடியாமல் போனால், அஞ்சல் வழங்கன் அந்த மடலை, காரணத்தை விளக்கும் பின்குறிப்புடன் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பிவைக்கும். மின்னஞ்சல் முகவரி தவறாக இருக்கலாம். முகவரிதாரரின் அஞ்சல் பெட்டி நிரம்பியிருக்கலாம்.

undercolour separation : மூல வண்ணப் பிரிப்பு : சிஎம்ஒய்கே வண்ண அமைப்பில், வண்ண அச்சிடலின் மூலவண்ணங்களான வெளிர்நீலம் (கியான்), செந்நீலம் (மெஜந்தா), மஞ்சள் நிறங்களைப் பிரித்து அவற்றுக்குச் சமமான சாம்பல் நிற அளவுகளாய் மாற்றி கறுப்பு மையால் அச்சிடும் முறை. இந்த முறையில், வண்ண மைகளைக் கலந்து உருவாக்கும் சாம்பல் நிறத்தைவிடத் தெளிவாகவும், கூர்மையாகவும் அமையும்.

undernet : அண்டர்நெட் : இணைய தொடர் அரட்டை (IRC)க்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டுப் பிணையம். மிகப்பெரிய, மிகச்சிக்கலான ஐஆர்சி பிணையத்துக்கு மாற்றாக 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.