பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virus signature

479

visual programming


கொண்ட சூழல்.வீஆர்எம்எல் (VRML - Virtual Reality Modelling Language) மொழியில் உருவாக்கப்பட்டது.பயனாளர் அதில் தோற்றமளிக்கும் பொருள்களோடு,நடப்புலகப் பொருள்களைப் போன்றே ஊடாட முடியும்.

virus signature:நச்சுநிரல் அறிகுறி: ஒரு நச்சுநிரலை அடையாளங்காட்டும் கணினிக் குறிமுறை.நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்கள், பாதிக்கப்பட்ட நிரல்களையும் கோப்புகளையும் கண்டறிய,ஏற்கெனவே அறியப்பட்ட நச்சுநிரல்களின் கணினிக் குறிமுறையைத் தேடிக் கண்டுபிடிக்கின்றன.

visible page:தோன்றும் பக்கம்; வெளித்தெரி பக்கம்:கணினி வரைகலையில், திரையில் காட்டப்படும் படிமம்.திரைப் படிமங்கள் காட்சி நினைவகத்தில்,பக்கம் எனப்படும் பகுதிகளில் எழுதப்படுகின்றன.ஒவ்வொரு பக்கமும் ஒரு திரைக்காட்சியைக் கொண்டுள்ளன.

Visual Baisc editor:விசுவல் பேசிக் தொகுப்பி:

Visual Basic For Applications : பயன்பாடுகளுக்கான விசுவல் பேசிக்: விண்டோஸ் 95/98 பயன்பாடுகளுக்கு நிரல் எழுதப் பயன்படுத்தப்படும் விசுவல் பேசிக் மொழியின் ஒரு குறுகிய வடிவம்.மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள பல்வேறு பயன்பாடுகளில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

Visual Basic,Scripting Edition: விசுவல் பேசிக்,உரைநிரல் பதிப்பு: பயன்பாடுகளுக்கான விசுவல் பேசிக் நிரலாக்க மொழியின் ஓர் உட்பிரிவு.இணையம் தொடர்பான நிரலாக்கத்துக்கென உருவாக்கப்பட்டது.ஜாவா ஸ்கிரிப்ட் போன்றே விசுவல் பேசிக் உரைநிரல் பதிப்பின் கட்டளைகளும் ஒரு ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் உட்பொதிவாக இருக்கும்.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வலை உலாவி,இதன் நிரல்களை புரிந்து செயல்படுத்தும்.வி.பி ஸ்கிரிப்ட்,விசுவல் பேசிக் ஸ்கிரிப்ட் என்றும் அழைக்கப்படும்.

Visual C++:விசுவல் சி++;விண்டோஸில் செயல்படக்கூடிய,சி++ நிரலாக்க மொழியின் பயன்பாட்டு உருவாக்க வடிவம்.மைக்ரோ சாஃப்ட் வெளியிடும் விசுவல் ஸ்டுடியோ கூட்டுத் தொகுப்பின் ஓர் அங்கம்.காட்சியடிப்படையான நிரலாக்கப் பணிச்சூழலை வழங்குகிறது.

visual display unit:காட்சித் திரையகம்:

visual display unit,cathode ray tube: எதிர்மின்வாய் கதிர்க்குழாய் காட்சித் திரையகம்:

Visual J++:விசுவல் ஜே++: மைக் ரோசாஃப்டின் காட்சியடிப்படையிலான ஜாவா நிரலாக்கப் பணிச்சூழல். ஜாவா மொழியில் பயன்பாடுகளையும் குறுநிரல்ளையும் உருவாக்கப் பயன்படுகிறது.மைக் ரோசாஃப்ட் விசுவல் ஸ்டுடியோவின் ஓர் அங்கம்.

visual programming:காட்சிநிலை நிரலாக்கம்: நீண்ட கட்டளைத் தொகுதிகளை எழுதிச் செல்வதற்குப் பதில்,பட்டித் தேர்வுகள், பொத்தான்கள்,சின்னங்கள் மற்றும் பிற முன் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளிலிருந்து அடிப்படை நிரலாக்கப் பொருள்கூறுகளைத் தேர்வுசெய்து