பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bottom-up programming

67

brain dump


உயர்நிலைப்பணிகளுக்கான நிரல் வரைவும் வடிவமைக்கப்படும்.

bottom-up programming : கீழிருந்து -மேலான நிரலாக்கம்:பெரும்பாலான நிரலர்கள்,மேலிருந்து கீழ் ,கீழிருந்து மேல் ஆகிய இரண்டு முறைகளின் சரியான கலவையே சிறந்த முறை என்று நம்புகின்றனர்.

bounce : திருப்புகை : திருப்பிவிடும் : திருப்பியனுப்பு : நமக்கு வரும் மின்னஞ்சலை நமது கருத்துரை எதுவுமின்றி,மேலொப்பம் எதுவுமின்றி அப்படியே இன்னொருவருக்கு திருப்பி அனுப்புதல் .அந்த மின்னஞ்சலைப் பெறுபவருக்கு நாம் திருப்பியனுப்பிய மடல் என்பதை அறிய முடியாது .நமக்கு அஞ்சல் அனுப்பியவரிடமிருந்து அது வந்துள்ளதாகவே எண்ணிக் கொள்வர் .

bounce keys : திருப்பு விசைகள் : விண்டோஸ் 95/98இல் உள்ள ஒரு சிறப்புக்கூறு.விசைப்பலகையில் ஒரே விசையை இருமுறையோ,அறியாமல் தவறுதலாக வேறுசில விசைகளையோ சேர்த்து அழுத்தும்போது ,அவற்றைப் புறக்கணிக்குமாறு நுண்செயலிக்கு ஆணை இடலாம் .

bound controls : கட்டுண்ட இயக்குவிசைகள் .

bound column : கட்டுண்ட நெடுக்கை .

boundary of input : உள்ளீட்டு எல்லை.

Bourne Shell : போர்ன் செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறைமைக்காக முதன் முதலாக உருவாக்கப்பட்ட செயல் தளம் அல்லது ஆணைமாற்றி எனலாம்.ஏடீ&டீ சிஸ்டம்-V-யூனிக்சின் அங்கமாக இடம் பெற்றது.1979ஆம் ஆண்டில் ஏடீ&டீ பெல் ஆய்வுக்கூடத்தில் ஸ்டீவ் போர்ன் (Steve Bourne) இதனை உருவாக்கினார்.ஏனைய யூனிக்ஸ் செயல்தளங்களில் இருக்கின்ற சில வசதிகள் (கட்டளை வரியில் ஒரு கோப்பினை திருத்தியமைப்பது,முந்தைய கட்டளைகளை திரும்ப வரவழைப்பது) இல்லாதபோதும் ,செயல்தள நிரல்கள் பெரும்பாலானவை போர்ன் செயல்தளத்தில் இயங்குபவையாகவே உள்ளன.

box class : பெட்டி இனக்குழு .

box layout : பெட்டி உருவரை .

bozo:போஸோ : இணையத்தில் குறிப்பாக செய்திக் குழுக்களில் முட்டாள்தனமான ,பிறழ்மனப்போக்குடையவர்களைக் குறிக்கப் பயன்படும் கொச்சைச் சொல்:பேச்சு வழக்குச் சொல்.

bozo filter : போஸோ வடிகட்டி : இணையப்பயனாளரின் கணினியில் மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுவுக்கான மென்பொருள் தொகுப்பில் இருக்கும் வசதி .இதன் மூலம் ஒருவர் தனக்கு ,குறிப்பிட்ட சிலரிடமிருந்து வரும் மின்னஞ்சல்களையும் செய்திக்குழுக் கட்டுரைகளையும் வடிகட்டிப் புறக்கணித்து விடலாம்.பெரும்பாலும், போஸோக்களிடமிருந்து வரும் தகவல்களைத்தான் இவ்வாறு தடுப்பர் .

box,decision : தீர்வுப்பெட்டி

bracket : அடைப்புக்குறி.

brain dump : குப்பைத்தகவல் : மின்னஞ்சல் அல்லது செய்திக்குழு வழியாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு வந்து குவிந்த முறைப்படுத்தப்படாத ஏராளத் தகவல் குப்பை .அவற்றைப் புரிந்து கொள்வதும் பொருளறிவதும் மிக்க கடினமான செயல் .