பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

broadband research network

68

briefcase


broadband research network : அகலக்கற்றை ஆய்வுப் பிணையம்.

branded : முத்திரைப் பெயர்.

branching : கிளைத்தல்; கிளைபிரித்தல்.

branch instruction : கிளைபிரி ஆணை.

BRB : பிஆர்பி : நான் மீண்டும் வருவேன் என்று பொருள்படும் I'll be Right Back என்பதுன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணைய அரட்டை மற்றும் இணைய தகவல் சேவைகளில் கலந்து கொள்வோர் தற்காலிகமாக அக்குழுக்களிலிருந்து பிரியும்போது தரும் செய்தி.

break : முறி ; நிறுத்து.

break,control : கட்டுப்பாட்டு முறிப்பு. கணினியில் ஒரு நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது ctrl., Break ஆகிய இரு விசைகளையும் அழுத்தி நிரலின் ஒட்டத்தை நிறுத்தலாம்.

break down : நிலைகுலைவு.

break mode : முறிவு பங்கு.

breakpoint instructions : நிறுத்துமிட ஆணைகள்.

breakout box : அவசரஉதவிப்பெட்டி : கணினியில் இரண்டு சாதனங்களுக்கு (கணினியும் இணக்கியும்) இடையில் ஒரு வடம் மூலம் இணைக்கப்படும் ஒரு வன்பொருள் சாதனம். தேவையெனில், வடத்தின் தனித்த கம்பிகளின் வழியாகவும் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

BRI : பிஆர்ஐ : அடிப்படைக்கட்டண இடைமுகம் என்ற பொருள் தரும் Basic Rate Interface என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஐஎஸ்டிஎன் தகவல் தொடர்பில் இரண்டு பி (64 கேபிபீஎஸ்) தடங் களையும் ஒரு டி (64 கேபிபீஎஸ்) தடத்தையும் பயன்படுத்தி குரல், ஒளிக்காட்சி மற்றும் கணினித் தகவல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுப்பப் பெறக்கூடிய வசதி.

bridge : இணைவி.

bridge router : இணைவித் திசைவி: பிணையத்தில் இணைவியாகவும் திசைவியாகவும் செயல்படும் ஒரு சாதனம். ஒரு குறும்பரப்பு அல்லது விரிபரப்பு பிணையத்தின் இரு கூறு களை இது இணைக்கிறது. இரு கூறு களுக்கிடையே தகவல் பொதிகளை வழிச்செலுத்த இரண்டாம் நிலை முகவரிகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.

briefcase : கைப்பெட்டி : விண் டோஸ் 95/98 இயக்க முறைமை யில் இருக்கும் ஒரு கோப்புறை (folder). பொதுவாக இரண்டு கணினிகளுக்கிடையே (குறிப்பாக மேசைக் கணினிக்கும் மடிக் கணினிக்கும் இடையே) கோப்புகளை ஒத்திசைவுப்படுத்திக் கொள்ளப் பயன்படுகிறது. இந்தக் கோப்புறையிலுள்ள கோப்புகளை வேறொரு கணினிக்கு வட்டின் மூலமோ, கம்பிவடம் மூலமோ பிணையம் மூலமாகவோ மாற்ற