பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

BSD Unix

70

bubble sort


BSD Unix : பிஎஸ்டி யூனிக்ஸ் : யூனிக்ஸ் இயக்க முறைமை ஏடீ&டீ பெல் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட போதிலும், உலகின் பல்வேறு நிறுவனங்களும் பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களும் யூனிக்ஸ் முறைமையை பல்வேறு வடிவங்களில் மேம்படுத்தி உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அவற்றுள் குறிப் பிடத்தக்கது, கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் பெர்க்கிலி சாஃப்ட்வேர் டிஸ்ட்ரிபியூஷன் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட யூனிக்ஸ் பதிப்பு ஆகும். இதுவே சுருக்கமாக பிஎஸ்டி யூனிக்ஸ் என்று அழைக்கப்பட்டது. இன்று யூனிக்ஸில் இருக்கின்ற பிணையத் திறன், கூடுதல் புறச் சாதன ஏற்பு, நீண்ட கோப்புப் பெயர், சி-செயல்தளம், விஐ தொகுப்பான், டீசிபி/ஐபீ ஆகிய பல கூடுதல் வசதிகள் பிஎஸ்டி யூனிக்ஸின் பங்களிப்பாகும். இன்றைக்கு யூனிக்ஸின் பரவலுக்கும், கல்விக் கூடங்களை இணையத்தில் இணைப்பதற்கும் காரணமாக அமைந்தது பிஎஸ்டி யூனிக்ஸ். 1பிஎஸ்டி என்ற பதிப்பில் தொடங்கி 4.3பிஎஸ்டி பதிப்புவரை வெளியிடப்பட்டது. 1993-ஆண்டு டன் பிஎஸ்டி யூனிக்ஸின் வெளியீடு நிறுத்தப்பட்டு விட்டது.

.bt : பிடீ : ஒர் இணைய தள முகவரியின் இறுதியில், பூட்டான் நாட்டைச் சார்ந்த தளம் என்பதைக் குறிக்க இணைக்கப்படும் பெருங்களப் பிரிவுப் பெயர்.

B-tree : பி-மரம் : இரும வடிவிலான மரக் கட்டமைப்பு என்று பொருள்படும். இது, ஒரு தகவல் தளத்திலுள்ள விவரங்களை அகரவரிசைப்படுத்தி சேமிக்கப்பயன்படும் ஒரு தரவுக் கட்டமைப்பு முறை ஆகும்.

BTW : பிடீடபிள்யூ : இந்த வழியே என்று பொருள்படும் By The Way என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணையத்தில் மின்அஞ்சல் மற்றும் செய்திக்குழுக் கட்டுரைகளில் குறிப்புரையைச் சுட்டும் சொல் தொடராக இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

bubble jet printer : குமிழி பீச்சு அச்சுப்பொறி : தொடா அச்சுமுறை சார்ந்த அச்சுப்பொறி. மைபீச்சு அச்சுப் பொறியில் அமைந்துள்ளது போன்ற நுட்பமே இதிலும் பயன் படுத்தப்படுகிறது. தாளின்மீது ஊசித்துளை வழியே மை பீச்சப்பட்டு எழுத்துகள் அச்சிடப்படுகின்றன. மையைத் தயாரிக்க தனிச் சிறப்பான சூடாக்கும் கம்பிகளைக் கொண்டுள்ளது. ஆனால் மைபீச்சு அச்சுப் பொறியில் பீஸோ மின்படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

bubble memory : குமிழி நினைவகம்.

bubble sort : குமிழி வரிசைப்படுத்தல் : ஒரு பட்டியலை வரிசைப் படுத்தப்பயன்படும் தருக்கமுறை. ஒரு பட்டியலில் அடுத்தடுத்துள்ள இரண்டு உறுப்புகளை எடுத்துக் கொண்டு அவை சரியான வரிசையமைப்பில் இல்லாவிடில் அவற்றை இடமாற்றம் செய்யும் முறை. இந்த முறையில் n உறுப்புகள் உள்ள பட்டியலில் ஒர் உறுப்பு n-1 உறுப்புகளுடன் ஒப்பிடப்பட்டு மிகச்சிறிய உறுப்பு, பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுகிறது. இச்செயல் முறை அடுத்தடுத்துள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் மேற்கொள்ளப்படுகிறது. நீரின் அடிப்பாகத்திலிருந்து எடைகுறைந்த காற்றுக் குமிழ் உந்தியுந்தி நீரின் மேற்பரப்புக்கு வருவதுபோல குறைந்த மதிப்புள்ள