பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cable matcher

75

calendar programme


மையச் செயலகம், நினைவகம், புறச்சாதனங்களுக்கான விரிவாக்கச்செருகு வாய்கள் அடங்கியதாய்ப் பலகை மற்றும் நிலை வட்டகம், நெகிழ் வட்டகம், குறுவட்டகம் இவற்றை உள்ளடக்கியுள்ள கணினிப் பெட்டி.

cable matcher : வட இசைவி : ஒரு சாதனத்தில் இணைக்கப்படும். வடத்தில் சற்று வேறுபாடான கம்பி இணைப்புகள் இருக்கும்போது, அதனைப் பொருத்தமானதாய் மாற்ற உதவும் ஒர் இடையிணைப்புச்சாதனம்.

cable modem : வட இணக்கி : சாதாரணத் தொலைபேசிக் கம்பித் தடத்தில் இணைந்து செயல்படும் இணக்கியிலிருந்து மாறுபட்டது. கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சு வடம் வழியாகத் தகவலை அனுப்பவும் பெறவும் செய்கிற இணக்கி. வினாடிக்கு 500 கிலோ துண்மி(பிட்)கள் வரை தகவல் பரிமாற்ற வேகமுள்ளவை வட இணக்கிகள். தற்போது அதிகமாய்ப் பயன்பாட்டில் உள்ள வழக்கமான இணக்கிகளைவிட அதிக வேகத்தில் தகவலை அனுப்பவல்லவை.

cable ribbon : வட நாடா

cable television : வடத்தொலைக்காட்சி

cabling diagram : வட வரைபடம் : கணினி அமைப்பில் அதன் பாகங்களையும் புறச்சாதனங்களையும் இணைக்கும் வடங்களின் பாதைகளைக் காட்டும் திட்ட வரைபடம். கணினியின் வட்டகங்களை அவற்றின் இயக்கிகளோடு இணைக்கும் வடஇணைப்புகளைப் புரிந்து கொள்ள இத்தகைய வரைபடங்கள் தேவை.

cache card : இடைமாற்று அட்டை : ஒரு கணினியின் இடைமாற்று நினைவகத்தை (cache memory) அதிகப்படுத்தும் விரிவாக்க அட்டை.

cache settings : இடைமாற்று அமைப்புகள்.

caddy : குறுவட்டுறை : வட்டினை இந்த குழைம (பிளாஸ்டிக்) உறையில் இட்டு குறுவட்டகத்தில் செருகுவர். பழைய கணினிகளில் இருந்த ஒருவகை குறுவட்டகத்தில் இதுபோன்ற உறையிலிட்ட குறுவட்டினைத்தான் பயன்படுத்த முடியும். இப்போதுள்ள

குறுவட்டுறை

குறுவட்டகங்களில் உறையில்லாத வட்டுகளைப் பயன்படுத்தலாம்.

CAFM : சிஏஎஃப்எம் : Compare to Aided Factory Management என்பதன் குறும்பெயர், கணினி உதவிடும் தொழிற்சாலையாகும்.

calendar : நாட்காட்டி

calendar programme : நாட்காட்டி நிரல் : காலங்காட்டி நிரல் : மின்னணுக் காலங்காட்டியை ஒத்திருக்கும் ஒரு காலக் குறிப்பேட்டை படைத்துக் காட்டும் ஒரு பயன்பாட்டு நிரல். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்ற வேண்டிய நமது பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். சில காலங்காட்டி நிரல்கள் சுவரில் மாட்டும்