பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CDFS

83

CD-R


6)-ல் இந்த நிரல், முறைமைக் கோப்புறையில் வைக்கப்பட்டிருந்தது. விசைப்பலகை மற்றும் சுட்டிக்கான சிடெவ்கள் கணினியை இயக்கும்போதே நிறுவப்பட்டுவிடும். ஏனைய சிடெவ்கள் அந்தந்த மென்பொருள் தொகுப்புகளுடன் இணைந்து வருகின்றன. மேக் பதிப்பு 7இல் சிடெவ்கள் கன்ட்ரோல் பேனல்கள் என்று அழைக்கப்பட்டன.

CDFS : சிடிஎஃப்எஸ் : 1. குறுவட்டில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை. 32 துண்மி (பிட்) பாதுகாப்பு முறையில் இது அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலேயே விண்டோஸ் 95/98 ஆகிய இயக்க முறைமைகளில் குறுவட்டின் உள்ளடக்கத்தை அணுகும் முறைகள் வரையறுக்கப்படுகின்றன. 2. யூனிக்ஸ் இயக்க முறைமையில், ஒரு கோப்பு முறைமை, படிக்க மட்டுமேயான, கழற்றி எடுக்கப்படும் ஒர் ஊடகத்தில் (குறிப்பாக குறுவட்டு) அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் தகுதிச்சொல். குறுவட்டு ஐஎஸ்ஓ 9660 தர நிர்ணயப்படி அமைந்தது என்பதை இச்சொல் குறிக்கும். நிலைவட்டு, நாடா, தொலைவுப் பிணைய இயக்ககங்கள் மற்றும் குறுவட்டு இயக்ககங்களை யூனிக்ஸ் கணினியில் நிறுவும்போது இதுபோன்ற கட்டளைச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

CD- : சிடி-ஐ : ஊடாடும் குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk, Interactive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிவ வட்டு(optional disk)த் தொழிநுட்பத்தில் வன்பொருள்/மென்பொருள் பற்றிய தர நிர்ணயம். படஉருவக் காட்சி, உருத் தெளிவு, அசைவூட்டம் கேட்பொலி மற்றும் சிறப்பு விளைவுகள் ஆகிய கூறுகளை சிடி-ஐ உள்ளடக்கியது. இத்தர நிர்ணயம் தகவலை குறியீடாக்கல், இறுக்கிச் சுருக்குதல், சுருக்கியவற்றை விரித்தல், பதிவான தகவலை திரையிடல் ஆகிய செயல்முறைகளையும் உள்ளடக்கியது.

CDP : சிடிபீ : தகவல் செயலாக்கத்தில் சான்றிதழ் படிப்பைக் குறிக்கும் Certificate in Data Processing stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர், கணினி மற்றும் நிரலாக்கம், மென்பொருள் உருவாக்கம், முறைமை ஆய்வு உட்பட, கணினி தொடர்பான துறைகளில் சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சிபெறும் தனிநபர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஃபார் சர்ட்டிஃ பிகேஷன் ஆஃப் கம்ப்யூட்டர் புரொஃபஷனல்ஸ் என்ற நிறுவனம் இந்தச் சான்றிதழை வழங்குகிறது.

CD Player : சிடி இயக்கி

CD plus : சிடி பிளஸ் : குறுவட்டில் தகவலைப் பதியும் முறை. கணினித் தகவல்களையும் கேட்பொலிப் பதிவுகளையும் ஒரே குறுவட்டில் பதிய இம்முறை வழிவகுக்கிறது. தகவல் பகுதியைப் படிக்கும்போது கேட்பொலிப் பதிவுகளோ, கேட் பொலிப் பகுதியை இயக்கும்போது தகவல் பகுதியோ பாதிக்கப்படுவதில்லை.

CD-R : சிடிஆர் : பதிதகு குறுவட்டு எனப் பொருள்படும் Compact Disk Recordable starp என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறுவட்டு எழுதி (CD Writer) மூலம் தகவலைப் பதிப்பித்து, குறுவட்டகத்தில் வைத்துப் படிக்க முடிகிற ஒருவகைக் குறுவட்டு.