பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



CD Recorder

84

CD-ROM/XA


CD Recorder : குறுவட்டெழுதி : குறுவட்டுப் பதிவி : ஒரு குறுவட்டில் எழுதும் சாதனம். குறுவட்டில் இந்தச் சாதனம் மூலம் ஒருமுறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது. நிரந்தரத் தகவல் சேமிப்புக்காகவும், பாதுகாப்பு நகலாக(Backup) பயன்படுத்தவும்,மென் பொருள்களைப் பல நகல்கள் எடுத்து வினியோகிக்கவும் குறுவட்டெழுதி மூலம் வட்டில் தகவல்கள் எழுதப்படுகின்றன.

CD-ROM : சிடி-ரோம் படிக்க மட்டுமேயான குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk - Read Only Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விவரச் சேமிப்பகத்தில் ஒருவகை. அதிகக் கொள்திறன் உள்ளது (650 MB). தகவலைப் படிக்க மின்காந்தமுறைக்குப் பதில் லேசர் கதிர் பயன்படுத்தப்படுகிறது. ஒருமுறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது (Write Once Read Many Times).

CD - ROM changer : சிடி.ரோம் மாற்றி.

CD-ROM Drive : குறுவட்டகம்; குறுவட்டு இயக்ககம் : படிக்க மட்டுமேயான தகவல்கள் பதியப்பட்டுள்ள குறுவட்டினை கணினியில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய வட்டகம் அல்லது வட்டு இயக்ககம்.

CEO : முதன்மை மேலாண் அலுவலர்.

CD-ROM juke box : குறுவட்டு தொகுதிப்பெட்டி குறுவட்டுகளின் தொகுதியை கணினியுடன் இணைத்துக் கையாள வழி செய்யும் வட்டியக்குச் சாதனம். 200 குறுவட்டுகள் வரை இதில் வைத்துப் பயன்படுத்த முடியும். பயனாளர் எந்த வட்டிலுள்ள தகவலையும் கையாள விரும்பலாம். இச்சாதனம் அக்குறிப்பிட்ட வட்டினைத் தேடிக் கண்டறிந்து தகவலை எடுத்துத் தரும். ஒரு நேரத்தில் ஒரு குறுவட்டு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட குறுவட்டினைக் கையாளும் திறனுள்ள கணினியெனில், தொகுதிப் பெட்டியிலுள்ள வட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கையாள முடியும்.

CD-ROM/XA : சிடி-ரோம்/எக்ஸ்ஏ, குறுவட்டு/எக்ஸ்ஏ சிடி-ரோம் எக்ஸ்டெண்டடு ஆர்க்கிடெக்சர் என்பதன் சுருக்கச் சொல். ஒரு விரி