பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

click speed

93

clipboard computer


click speed : சொடுக்கு வேகம் : பயனாளர் சுட்டியின் மேலுள்ள பொத்தானை அல்லது வேறு சுட்டும் சாதனத்தை முதலாவது தடவை அழுத்தியதற்கும் இரண்டாவது தடவை அழுத்தியதற்கும் இடையிலுள்ள எந்த குறுகியகால இடை வெளி, இரட்டைச் சொடுக்காக (double click) எடுத்துக் கொள்ளபடுமோ, அந்தக் காலஅளவு, சொடுக்கு வேகம் எனப்படும். இரண்டு ஒற்றைச் சொடுக்குகளாக எடுத்துக் கொள்ள இயலாததாக ஆக்கும் விரைவான கால இடைவெளி.

clear key : துடைக்கும் விசை; விலக்கு விசை : சில விசைப்பகுதிகளில் எண்முறை விசைப்பலகையின் மேல்பக்க இடது மூலையில் உள்ள விசை. நடப்பில் தெரிவு செய்த பட்டியலைத் துடைக்கவோ நடப்பில் தெரிவு செய்ததை நீக்கவோ பயன்படும்.

client error : வாடிக்கையாளர் பிழை : வாடிக்கையாளர் தவறு ; கிளையன் பிழை : கட்டளை ஒன்றைப் பொருள் கோள் செய்வதில் உள்ள சிரமத்தின் விளைவாக அல்லது சேய்மை புரவன் கணினியுடன் சரிவர இணைக்க இயலாமையின் விளைவாக எழும் சிக்கல்.

client - server relationship : கிளையன் - வழங்கன் உறவுமுறை.

clickstream : சொடுக்கு தாரை : வலைத்தளம் ஒன்றில் ஒன்றைத் தேடும்போது பயனாளர் செல்லும் வழி. வலைப்பக்கத்தில் செய்யப்படும் ஒவ்வொரு தனித்தனித் தேர்வும் தாரையில் ஒரு சொடுக்கைச் சேர்த்துவிடும். தேவையானதைக் கண்டுபிடிக்க இயலாமல் மேலும் பயனாளர் சொடுக்குத் தாரரையில் போவாரானால் அவர் வேறு வலைத்தளத்துக்குத் திசைமாறிச் செல்லக் கூடும். பயன்படுத்தும் போக்குகளை ஆய்ந்தால் வலைத்தளம் உருவமைப் போர் இணக்கமான தள அமைப்புகள், இணைப்புகள், தேடு வசதிகள் போன்றவற்றை வழங்க முடியும்.

clients/server architecture : கிளையன்/வழங்கன் கட்டுமானம்.

client-server relationship : கிளையன்-வழங்கன் உறவுநிலை.

client side image maps : கிளையன் பக்கபடிமப் பதிலீடுகள் : வலைத் தளப் பக்கக் கிளையன் (எ.டு.: வலை உலாவி) தெரிவு செய்ய உதவும் சாதனம். இதன்மூலம் ஒரு படிமத்தின் பல பகுதிகளைச் சுட்டிமூலம் சொடுக்கி விருப்பத் தேர்வின்படி பயனாளரால் தெரிவு செய்யப்பட்டவற்றைக் காட்டலாம். சின்னத்தைச் சொடுக்கி பட்டியலில் விரும்பிய படங்களைப் பார்ப்பதை ஒத்தது. தொடக்க காலத்தில் (1993) படிமங்களை வலைத்தளத்தில் நடைமுறைப்படுத்தியது போன்று கிளையன் பக்க படிமத்தை அனுப்ப வலை வழங்கனை ஒருங்கிணைக்காது. ஆனால் செயல்பட வைக்கும். பொதுவாக பதிலீட்டு வேகத்தை மேம்படச் செய்யும்.

clipboard computer : பிடிப்புப் பலகைக் கணினி : எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடிய கணிணி, தோற்றத்திலும் செயல்பாட்டிலும் மரபுமுறைப் பிடிப்புப் பலகையை ஒத்தது. பிடிப்புப் பலகைக் கணினியில் நீர்மப் படிகக் காட்சித் திரை (LCD) உள்ளிட்டுச் சாதனத்துக்குப் பதிலாக ஒரு பேனா இருக்கும்.