பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

close botton

95

CMY


இடைமுகப்பில் சாளரத் தலைப்புப் பட்டையின் இடது மூலையில் உள்ள சிறுபெட்டி. பெட்டியின் மீது சொடுக் கினால் சாளரம் மூடப்பட்டு விடும்.

close botton : மூடு பொத்தான்: விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் தோன்றும் சாளரங்களில் தலைப்புப் பட்டையில் வலது மூலையில் உள்ள x குறியிட்ட ஒரு சதுரப்பொத்தான். விண்டோஸ் 3.x பணித்தளத்தில் இப்பொத்தான் தலைப்புப் பட்டையின் இடது மூலையில் இருக்கும். பொத்தானில் சொடுக்கினால் பலகணி மூடப்படும்.

closed frame : மூடிய சட்டம்

closed routine : மூடிய நிரல்கூறு; மூடிய துணை நிரல்.

closing files : மூடிய கோப்புகள்.

close statement: மூடு ஆணை; மூடு கூற்று.

closeup : அணுக்கக் காட்சி: நெருக்கக் காட்சி.

.cm : சிஎம் : இணைய தள முகவரி, கேமரூன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

CMA : Computer Aided Manufacturing என்பதன் முதலெழுத்துக் குறும் பெயர். கணினி உதவியுடன் உற்பத்தி என்பது இதன் பொருள்.

cloth ribbon : துணி நாடா: தொடு நிலை அச்சுப்பொறி தட்டச்சுப் பொறி ஆகியவற்றில் பொதுவாக மையிடப்பட்ட நாடா பயன்படுத்தப் படும்.அச்சுப்பதிப்புமுனை நாடாவைத் தாக்கி மையைத் தாளுக்கு கொண்டு சென்று பதியவைக்கிறது. பின் புதுமை பெறுவதற்காக நாடா சிறிது நகரும். அச்சுப்பொறியில் பொருந்துவதாக துணி நாடா சுருணையில் பொதிய வைக்கப்பட்டிருக்கும் அல்லது நாடாப் பேழையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். பல காரியங்களுக்கும் துணிநாடா போதுமானது என்றாலும், துல்லியம் வேண்டும் என்னும்போது அதற்குப் பதிலாக ஃபிலிம் நாடா பயன்படுத்தப்படும். ஆனால் ஃபிலிம் நாடா பன்முறைப் பயனுக்கு உதவாது. துணிநாடாவில் மீண்டும் மீண்டும் மை தடவிக் கொள்ளலாம். அதனால் அது பன்முறைப் பயனுக்கு உகந்தது.

CMOS RAM : சீமாஸ் ரேம் : நிரப்பு உலோக ஆக்சைடு குறைகடத்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நினைவகம் அமைத்தல். சீமாஸ் சிப்புகள் மிக மிகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் வழங்கும் சாதனத்தின் இரைச்சலைத் தாங்கவல்லவை. இம்மாதிரியான சிப்புகள் மின்கலங்கள் அளிக்கும் மின்சாரத்தில் செயல்படும் வன்பொருள் பாகங்களில் மிகுந்த பயனுள்ளவையாய் இருக்கின்றன. நுண்கணினிக் கடிகாரங்கள், செயல்முறையில் அமைப்பில் இருந்துவரும் சிலவகை அழித்தெழுது அட்டைகள் போன்ற வன்பொருள்களில் பயனுள்ளவையாய் உள்ளன.

CMOS setup : சீமாஸ் அமைவு: தேதி, நேரம் போன்று சில குறிப்பிட்ட விருப்பத் தேர்வுகளை அமைத்துக் கொள்ள, இயக்க நேரத்தில் அணுகக் கூடிய பயன்பாடுமிக்க அமைப்பு.

CMY : சிஎம்ஒய்: CYAN (மயில்நீலம்), MAGENTA (செந்நீலம்) ,YELLOW (மஞ்சள்), என்ற சொற்களின் முதல் எழுத்துக்களான சொல். ஒளியை உட்கிரகித்து உருவாக்கப்படும்