பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CΜΥΚ

96

cobweb site


வண்ணங்களை வருணிப்பதற்கான ஒரு மாதிரி. தாளின்மீது படும் மை போன்றது. ஒளியை நீக்கும் வகையிலான கணித்திரை ஒளிக்காட்சி போன்றது அன்று. கண்ணிலுள்ள மூவகை கூம்புவடிவ செல்கள் மயில் நீலம், செந்நீலம், மஞ்சள் நிறங்களால் முறையே உட்கிரகிக்கப்படும் அதாவது (வெண்மை நிறத்திலிருந்து பிரிந்து வரும்) சிவப்பு, பச்சை, நீல நிறங்களை உணர்கின்றன. ஒளியை வடிகட்டும் இந்த அடிப்படை நிறங்களிலுள்ள வண்ணப் பொருளின் விழுக்காடு கலந்து விரும்பிய நிறத்தைக் கொண்டு வரலாம். எந்த வண்ணப் பொருளும் இல்லாதிருந்தாலும் வெண்மையில் எந்த மாற்றமும் இராது. இந்த வண்ணப்பொருள்கள் எல்லாவற்றையும் நூறு விழுக்காடு சேர்த்தால் வெண்மை கருமை ஆகிவிடும்.

CMYK : சிஎம்ஒய்கே : CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (u065&oir), BLOCK (565.ju) ஆகிய சொற்களின் முதல் எழுத்து களால் உருவான குறும்பெயர் CYMK. CMY நிறமாதிரி போன்ற ஒரு நிற மாதிரி. நூறு விழுக் காடு மயில் நீலம், செந்நீலம், மஞ்சள் சேர்ப்பதைப் போலன்றி தனிக் கருப்புநிறக் கூறுடன் சேர்ந்தால் கருப்பு நிறம் காட்டும் தன்மையது.

.cn : சின் : ஒர் இணைய தள முகவரி, சீன நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

coaxial cable : இணையச்சு வடம்

cocktail party : கலக்கல் விருந்து

.co : சிஓ : ஒர் இணையத் தள முகவரி, கொலம்பிய நாட்டைச்சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

code, absolute : முற்றுக் குறிமுறை; நேரடிக் குறிமுறை.

code, alphabetic : அகரவரிசைக் குறி முறை எழுத்துக் கோவை குறிமுறை.

code, alphanumeric : எழுத்தெண்க் குறிமுறை.

code, binary : இருமக் குறிமுறை.

Code, Division Muitiple Access : பகுதி பன்முக அணுகல்குறிமுறை : பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கியும் அறியும். அதனால் பெற்ற சமிக்கையை குறியீடு ஆக்க முடியும். ஒவ்வொரு தொடர்பிலா வரிசைமுறையும் வெவ்வேறு தகவல் தொடர்பு தடத்தை ஒத்தது. இலக்கமுறை செல்பேசிக்காக மோட்டாரோலா இந்தப் ஒன்று சேர்ப்பு வகையைப் பயன்படுத்துகிறது.

code editor : குறிமுறை தொகுப்பி.

code error : பிழைக் குறிமுறை.

code generator : குறியீடு உருவாக்கி.

code, machine : எந்திரக் குறிமுறை.

code, optimization : குறிமுறைச் சரித்திறனாக்கம்.

code, relocatable : மறுஇட அமைவுக் குறிமுறை.

code, source : ஆதாரக் குறிமுறை; மூலக் குறிமுறை; மூல வரைவு.

cobweb site : ஒற்றடைத் தளம் : அநேக நாட்களாகப் பழக்கத்தில் இல்லாதுபோன ஒரு வலைத்தளம்.