பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fold

102

For


folder - மடிப்பட்டை, மடிப்பி : இது ஒரு சிறிய மஞ்சள் நிறப்படம்.

folder, kinds of - மடிப்பி வகைகள் : சாளரம் இரு பகுதிகளைக் கொண்டது. அதன் இடப்பக்கத்தில் மடிப்பிகளின் பட்டியல் இருக்கும். இம்மடிப்பிகள் மின்னஞ்சல் செய்திகளைத் தேக்கி வைக்கப் பயன்படுபவை. பின்வருவன திட்டமான மடிப்பிகளும் அவற்றின் நோக்கங்களும். 1. உள்பெட்டி - உள்வரும் செய்திகள் இங்குச் சேமிக்கப்படுதல். 2. புறப்பெட்டி - வெளிச் செல்லும் செய்திகள் தற்காலிகமாக இங்குச் சேமிக்கப்படுதல். 3. அனுப்பப்பட்ட இனங்கள் - அஞ்சல் பணியாளிக்குச் செய்தி அனுப்பப்பட்டபின், புறப்பெட்டியிலிருந்து அது நீக்கப்படும். அதன்படி மட்டும் மடிப்பியில் சேமித்து வைக்கப்படும். 4. நீக்கப்பட்ட இனங்கள் - பிற மடிப்பிகள் எவையேனும் ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட எல்லாச் செய்திகளும் இங்குச் சேமித்து வைக்கப்படுதல். 5. வரைவுகள் - இம்மடிப்பியில் பார்வை விரைவி தானாக எல்லாச் செய்திகளையும் சேமித்து வைத்தல்.

font - A collection of printing characters of a particular size and style. அச்செழுத்துத் தொகுதி : அச்சுருக்களின் தொகுதி, குறிப்பிட்ட அளவும் பாணியும்கொண்டது.

font tag - அச்செழுத்துத் தொகுதி ஒட்டு : ஆற்றல் வாய்ந்தது. இத்தொகுதியின் இனத்தைச் சுட்டியறியலாம்.

footer - அடிக்குறிப்பு : பக்கத்திற்கு அடியில் பயன்படும் குறி. இதை வேண்டியவாறு உருவாக்கலாம். ஆராய்ச்சி நூல்களில் பயன்படுவது. ஒ. header.

force - விசை : ஒரு துணைக் கட்டளையை நிறைவேற்ற ஒரு கணிப்பொறி நிகழ்நிரலின் இயக்கத்தில் குறுக்கிடுதல். இக்கட்டளை, கட்டுப்பாட்டை நடைமுறைச் செயலின் மற்றொரு பகுதிக்கு மாற்றுவது.

Forester research findings - பாரஸ்டர் ஆராய்ச்சி முடிவுகள் : இவை வலையத்தளம் பற்றியவை. 1. வலையத் தளங்களில் 90% வடிவமைப்பு அமைதி தருவதாக இல்லை. 2. விற்பனை இழப்பு 50% 3. வருகை தருபவர்களில் 40% திரும்புவதில்லை. 4. வணிகப் பெயர் இழப்பு. ஏனெனில் ஒவ்வொரு 10 பேரும் சராசரி அடுத்த 10 பேருக்குத் தரக்குறைவைப் பற்றிச் சொல்லுதல். 5. தவறான மீள்வடிவமைப்புகளால் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வீணாகச் செலவழிதல்.