பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

freq

105

full


medium without regard to preassigned fixed fields. தடையிலாப் புலம் : மீட்புக் கருவியமைப்பின் தகவல் பண்பு. முன்னரே ஒதுக்கப் பெற்ற நிலையான புலங்களைக் கருத்தில் கொள்ளாமல், தகவல் ஊடகத்தைப் பதிவு செய்ய அனுமதிப்பது.

frequency - The number of times per second that a periodic event repeats itself. The unit is hertz. அதிர்வெண் : ஒரு கால நிகழ்வு தன்னைத் தானாகத் திருப்பிக் கொள்ளுதல். இது ஒரு வினாடிக்கு இத்தனை தடவைகள் என்று அமையும். அலகு ஹெர்ட்ஸ்.

frequency division multiplexing - A method used to transmit several signals along a single data communications circuit. அதிர்வெண் பிரிவைப் பகுதியாக்கல் : ஒரு தனித் தகவல் தொடர்ச் சுற்றுவழியாகப் பல குறிகைகளைச் செலுத்தும் முறை.

friction feed - A method by which paper is moved between the primary roller and the punch roller in a printer as in a standard typewriter. உராய்வூட்டல் : இது ஒரு முறை. அச்சியற்றியில் இதில் முதன்மை உருளைக்கும் துணை உருளைக்கும் இடையே தாள் நகரும். ஒரு திட்டமான தட்டச்சுப் பொறியில் நகர்வதுபோல் இது நகரும்.

FSO, File system object - எஃப்எஸ்ஓ, கோப்புமுறைப் பொருள், கோமுபொ.

FSO object model- எஃப்எஸ்ஒ பொருள் மாதிரி : இது விஷூவல் பேசிக்கின் ஒரு புதிய பண்பு. ஒரு பொருள் அல்லது நோக்க அடிப்படையில் அமைந்த கருவி. மடிப்பிகள், கோப்புகள் ஆகியவற்றைக் கொண்டு வேலை செய்வதற்கு உதவுவது. மடிப்பிகளை ஆக்குவது, நகர்த்துவது, நீக்குவது. கோப்புகளை முறையாக்குவது.

FUD - Fear, uncertainty and doubt பஃட் : அச்சம், உறுதியின்மை, ஐயம், அஉஐ. கணிப்பொறியை மக்கள் வாங்காததற்குக் காரணங்கள்.

full page display - A terminal displaying at least 80 columns (80 character) across and 55 lines of copy (the average 81/2 x 11 inch page capacity) on the screen. முழுப்பக்கக் காட்சி : 80 பத்திகளையும் (குறுக்கே 80 உருக்கள்) படியின் 55 வரிகளையும் (சராசரி 81/2 x 11 அங்குலப் பக்கத்திறன்) திரையில் காட்டும் முனையம்.