பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சியலகு ஆகியவை இருக் கும். இவ்வலகு கட்டுப்பாட்டுப் பகுதியால் கண்காணிக்கப்படும். வேறு பெயர் வரைகலை நோக்கி.

graphics -Pictorial information displayed on a VDU. It can be usually be manipulated using a light pen or keyboard. வரைகலை: காட்சித் திரையில் காட்ட்ப்படும் படத்தகவல். வழக்கமாக ஓர் ஒளி எழுதியை அல்லது விசைப்பலகையைப் பயன்படுத்தி இதைக் கையாளலாம்.

graphics business -வணிக வரைகலை : பலவகைப்படங்களும் கட்டப்படங்களும் இதில் அடங்கும். இவை விற்பனை, ஆதாயம், இழப்பு, பொருள்பட்டியல் முதலியவற்றைக் குறிப்பவை. எ-டு பட்டை வரைபடம்.

graphics characters - Small shapes occupying the same space as a letter or number on a VDU. It is used to improve games, program and graph. வரைகலை உருக்கள் : எழுத்து அல்லது திரையில் தோன்றுபவை. நிகழ்நிரல், விளையாட்டு, வரைபடம் முதலியவற்றை மேம்படுத்தப் பயன்படுபவை.

graphics display unit - The unit presenting graphical information to the user. வரைகலை காட்சி அலகு : இவ்வலகு வரைகலைத் தகவல் களைப் பயனாளிக்கு அளிப்பது.

graphics for applications - பயன்பாடுகளுக்குரிய வரை கலை : பயன்பாட்டிற்கு வரை கலையை உருவாக்கிப் பயன்படுத்தப் பல வழிகளில் விஷூவல் பேசிக் உதவுகிறது. ஓர் பயன்பாட்டின் இடைமுகத்திற்குப் பாணி, காட்சியமைப்பு ஆகிய இரண்டையும் வரை கலை சேர்க்கிறது. கோடுகள், வட்டங்கள், சிறு படங்கள் ஆகியவை வரை கலைப்பொருள்கள் ஆகும். இவற்றை எளிதாகவும் விரைவாகவும் விஷூவல் பேசிக்கில் பின்வருமாறு காட்ட இயலும். 1) படிவத்தின் பின்னணியாகப் படத்தைச் சேர்த்தல். 2) உருக் கட்டுப்பாடு, 3) கோட்டுக் கட்டுப்பாடு, 4) வடிவக்கட்டுப்பாடு, 5) எழுச்சி யூட்டும் கட்டுப்பாடு, 6) படப் பெட்டிக் கட்டுப்பாடு. விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க.

graphics mode-Operating the computer in such a way it displays graphics to the best effect. - வரைகலை முறை : சிறந்த பயனளிக்கும் வகையில் வரை கலை திரையில் உண்டாகுமாறு கணிப்பொறியை இயக்குதல்.