பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

int

129

ini

informatics, infomology - The study of processing data to provide information. தகவலியல் : செய்தியளிக்க முறையாக்கப்படும் தகவல்கள் பற்றி ஆராயுந்துறை.

information - That which got from the processing of data. செய்தி : தகவல்களை முறையாக்குவதிலிருந்து பெறப்படுவது.

information bits - characters or digits. செய்தி நுண்மிகள் : உருக்கள் அல்லது இலக்கங்கள்.

information channel - The hardware used in a data transmission link between two terminals. செய்தி வழி : இரு முனையங்களுக்கிடையே தகவல் செலுத்தும் இணைப்புக்காகப் பயன்படும் வன்பொருள்.

information processing - data processing. செய்தி முறையாக்கல் : தகவல் முறையாக்கல்

information provider, IP - செய்தியளிப்பவர், செ.அ : காட்சித்திரையில் காட்ட நிறையச்செய்திகளை வழங்கும் ஆள் அல்லது அமைப்பு.

information retrieval - செய்தி மீட்பு : பயனாளிகள் அணுகுவதற்கு ஏற்றவாறு செய்திகளை முறையாக்கல், எ-டு நூலகப் பணிகள்.

information society - செய்திச் சமுதாயம் : வருங்காலச் சமுதாயம், மின்னணுக் கருவியமைப்புகள் வழியாகத் தொடர்பு கொள்வது.

information technology - பா.ΙΤ.

information theory - செய்திக் கொள்கை : ஒரு செய்தித் தொடர்பு வலையமைவில் செய்திச் செலுத்தும் வீதம் பற்றிய கருத்துத் தெரிவு.

infotech park - செய்தித் தொழில் நுட்ப இயல் பூங்கா : தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக உள்ளது. எ-டு தரமணி டைடல் பூங்கா.

inherited error - An error in a result attributed to some previous stage of processing. Eg. In a single - step operation an error carried thro from a previous step வழிவரு பிழை : முன்னரே நடைபெறும் முறையாக்கலினால் கிடைக்கும் முடிவிலிருந்து உண்டாகும் பிழை. எ-டு ஒருபடிச்செயலில், முன்னரே உள்ள படியிலிருந்து பிழை தொடர்கிறது.

inhibit-prevent-தடு: நிறுத்து.

inhibiting signal - A signal preventing an operation from being performed.

initial instructions - தொடக்க அறிவுறுத்தல்கள் : ஒரு கணிப்