பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inter

134

inter

அணுக்கம் பெறலாம். எக்கணிப்பொறியிலும் சேமித்து வைத்த நிகழ்நிரல்களை ஓட விடலாம். 6) மின்னஞ்சல் மூலம் பல பயனாளிகளுடன் உலக அளவில் தொடர்பு கொண்டு, பயனுள்ள கலந்துரையாடல் நடத்தலாம். 7) நல்ல வணிக வாய்ப்புள்ளது.

internet booth, community - சமுதாய இணைய நிலையங்கள் : நன்கு வகுக்கப் பட்டுள்ள திட்டத்தில் தமிழக அரசால் 1500 நிலையங்கள் அல்லது சாவடிகள் அமைக்கப்படும். இலண்டனில் அமைந்துள்ள வோர்ல்டுடெல் என்னும் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு இதைச் செயற்படுத்த உள்ளது. 2005 ஆம் ஆண்டிற்குள் இந் நிலையங்கள் 10,000 என்னும் அளவுக்கு உயரும் (1999).

internet connections in India - இந்தியாவில் இணைய இணைப்புகள் : நாஸ்கம் அளவைப்படி 1988 நவம்பர் வரை 17 இலட்சம், 1999 டிசம்பர் வரை 61 இலட்சம். பயனாளிகள் 2.1 மில்லியன். இணைய ஆற்றல் இனி இந்தியாவில் வளரவேண்டும். கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்புகளைப் பயன்படுத்தினால் இணையம் வரும் ஆண்டுகளில் 37 மில்லியன் வீடுகளை அடையலாம். தனியாள் கணிப்பொறி வளர்ச்சி 25% அளவே உள்ளது. 2004 க்குள் இது பலமடங்காகப் பெருகும்.

internet connection requirements - இணைய இணைப்புத் தேவைகள் : அவையாவன: 1) கணிப்பொறி 2) தொலைபேசி 3) இருசெயலி 4) இணைப்புப் பணி வழங்குபவர்.

Internet crimes - இணையக்குற்றங்கள் : கணிப்பொறிக் குற்றங்கள். இவற்றிற்கு நிலையான தீர்வுகள் இல்லை. சட்டங்களும் இவற்றை கட்டுப்படுத்த இயலா. அவ்வளவு சந்து பொந்துகள் உள்ளவை அவை. இக்குற்றங்களில் முதன்மையானவை 1) தகவல் திருட்டு. 2) ஒற்றறிதல் 3) பணவரவு அட்டையில் ஏமாற்றுதல். 4) பாலியல் படங்கள் 5) தீரவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம். இக்குற்றங்களால் ஆண்டுக்குப் பலகோடி ரூபாய் அளவுக்குப் பண இழப்பு ஏற்படுகிறது.

internet growth factors - இணைய வளர்ச்சிக் காரணிகள் : இவை பின்வருமாறு. 1) தகவல் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வருதல்.