பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

key

141

Kri



keyboard shortcuts -திறவுப் பலகைக் குறுக்கு வழிகள் : எந்நிகழ்நிரலுக்கும் இக்குறுக்கு வழிகளை உருவாக்கலாம். இதற்கு அப்பயன்பாட்டு உரையாடல் பெட்டிப் பண்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

key, primary -தொடக்கத்திறவு : இத்திறவு ஒரு தகவல் தள அட்டவணையிலுள்ள ஆவணத்தைச் சிறப்பாக இனங்காண்பது. தொடர்புறு தகவல்தளங்களில் இத்திறவு ஒன்றுக்கு மேற்பட்ட புலங்களைக் கொண்டிருக்கும்.

keyword - The significant word in a phrase in information retrieval systems. Eg. In the title modern medicine, the Word medicine is the keyword. திறவுச்சொல் : செய்தி மீட்பு முறைகளில் ஒரு சொற்றொடரிலுள்ள சிறப்புச் சொல். தற்கால மருத்துவம் என்னுந் தலைப்பில் மருத்துவம் என் பது திறவுச்சொல்.

kilobard -கிலோபாஃட் :ஒரு வினாடிக்கு ஓராயிரம் இருமிகள்.

kilburn, Tom Prof. -பேரா.டாம் கில்பர்ன்: 1948இல் மான்செஸ்டரில் உள்ள முதல் கணிப்பொறியை அமைத்தவர். ஒரு நிகழ்நிரலை ஒடவிடவும் சேமிக்கவல்ல நினைவகத்தைக் கொண்டது இக்கணிப்பொறி.தற்கால முன்னேற்றங்கள் எல்லாம் இதனோடு நெருங்கிய தொடர்புடையவை. கணிப் பொறிக் காலத்தின் மறக்கப்பட்ட முன்னோடி இவர்.

knowledge management - அறிவு மேலாண்மை : தகவல் தொழில்நுட்பத்தின் உயிர் நாடி.

knowledge management, types of- அறிவு மேலாண்மை வகைகள் : இப்பயிற்சி வகைகள் பின்வருமாறு : 1) உள் இணையத்தை அமைத்தல். 2) தகவல் களஞ்சியம் அமைத்தல். 3) முடிவுகளைச் செயல்படுத்தல் 4) குழுப்பணியை நிறைவேற்றல். 5) அறிவுப் பணியாளர் குழுவை உருவாக்கல். 6) புதிய அறிவுப் பங்களிப்புகளை நிறுவுதல். 7) அறிவு அடிப்படையில் அமைந்த பணிகளைத் தொடங்கல். 8) அகவல்லாண்மையின் மூலங்களைக் கண்டறிதல்.

Krishnamoorthy V. Dr.-முனைவர். வி. கிருட்டினமூர்த்தி : அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர், தகவல் தொழில் நுட்பவியல் அறிவுரையாளர். இவர்தம் சிறந்த பங்களிப்புகளில் ஒன்று பொன்மொழி.