பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

main

151

mark


கொள்ளும் கருவியமைப்பு.


mainframe - a large computer. முதன்மைக் கணிப்பொறி : பொருங்கணிப்பொறி.


main memory - internal memory : Rom and Ram. முதன்மை நினைவகம் : உள் நினைவகம், ரோம், ரேம்.


main programme - the central part of a programme. முதன்மை நிகழ்நிரல் : ஒரு நிகழ்நிரலின் மையப்பகுதி.


main storage - The store from Which instructions are executed. முதன்மைச் சேமிப்பு : கட்டளைகள் நிறைவேற்றப்படும் சேமிப்பு.


management information system, MIS - மேலாண்மைத் தகவல் அமைப்பு, மேதஅ : தொழில் தகவல்களை அளிப்பது. பொருள்பட்டியல், விற்பனை, சம்பளப் பட்டியல், கொடுக்க வேண்டிய வர வேண்டிய கணக்கு. இவை மேலாளர்களுக்கு உதவியாக இருப்பவை.


manipulation - Changing data to some useful form. கையாளல் : பயனுள்ள வடிவத்தில் தகவலை மாற்றல்.


manual data processing, disadvantages of - கைவழித் தகவல் முறையாக்கலின் தீமைகள் : இவையாவன.

1) பயனுறுதிறனும் தகவல் திருத்தமும் வரம்புடையவை.

2) கையால் செய்வதால் நேரம் அதிகமாகும்.

3) பிழைகளுக்கு ஆளாகக் கூடியது.

4) தாள்கள் முதலியவற்றைப் பயன்படுத்தவதால், பாதுகாப்பதும் பேணுவதும் கடினம்.

5) திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்வது கடினம். ஒ. computerised data processing, advantages of.


map - குறிதாள் : காந்த வட்டில் உள்ள சேமிப்பு ஒதுக்கீட்டின் குறியீட்டெண்.


mapnet - படஇணையம் : இணையப்பணி. நம் முன் இணையத்தை படமாக்கிக் காட்டுவது.

margin - ஒரம் : இது பக்கத்தில் இடமும் வலமும் மேலுங் கீழும் உள்ளது. இவ்வியல்புகள் எல்லா ஆவணங்களுக்கும் உண்டு. ஒரங்களை உரையாடல் பெட்டி அல்லது கோடிடுவிகளைக் கொண்டு மாற்றலாம்.


mark - A character used to identify the end of a set of data, eg. tape mark. குறி : தகவல் தொகுதி முடிவைக் காட்டப் பயன்படும் உரு.