பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mem

154

menu


binary form.

நினைவகம் : இது கணிப்பொறித் தொகுதியின் ஒரு பகுதி. இதில் எதிர்காலப் பயனுக்கு வேண்டிய தகவல்களும் கட்டளைகளும் இரும வடிவத்தில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.

memory address register, MAR - நினைவக முகவரிப் பதிவகம், நிமுப : உள்ளிட முகவரியிலிருந்து மீட்கப்படும் அல்லது சேமிக்கப்படும் சொல் செல்லும் பகுதி இது.

memory data register, MDR - நினைவகத் தகவல் பதிவகம், நிதப : மீட்கப்படும் அல்லது சேமிக்கப்படும் தகவல்கள் வைக்கப்படும் பகுதி இது.

memory, kinds of - நினைவக வகைகள் : இவை பின்வருமாறு.

1) முதன்மை நினைவகம் : இது வரம்பில் அணுக்க நினைவக (RAM) அமைப்புள்ளது. அதாவது அழியும்.

2) துணை நினைவகம் : இது அழிவதற்கில்லை.

3) படிப்பதற்குரிய நினைவகம் (ROM) : இது அழியாது.

4) விரைவு நினைவகம் (Cache memory) : இதுவும் அழிவதற்கில்லை.

5) நிகழ்நிரலாக்கும் படிப்பதற்குரிய நினைவகம் (PROM) : இதுவும் அழிவதற்கில்லை. இவையனைத்தும் கருவிவகைச் சார்ந்தவை. மூளை நினைவாற்றலின் போலிகள் எனலாம்.

memory storage - நினைவக சேமிப்பு : கணிப்பொறியின் சேமிப்பு வசதிகளின் தொகு மொத்தம் உள்ளகம், உருளை, வட்டு, அட்டை, தாள் நாடா.

memory unit - நினைவக அலகு : நிகழ்நிரல்களையும் தகவல் களையும் சேமிக்கப் பயன்படுவது.

menu - A list of choices available in a computer programme. An important feature to be added to an application. பட்டி : ஒரு கணிப்பொறி நிகழ்நிரலிலுள்ள தெரிவு களின் தொகுப்பு, ஒரு பயன்பாட்டுடன் சேர்க்க வேண்டிய இன்றியமையா இயல்பு.

menu bar - பட்டிப் பட்டை : விண்டோசின் பகுதி. பல பட்டிகளைக் காட்டுவது. எல்லாத்துணைத் தெரிவுகளும் வரும். அவற்றில் வேண்டியவற்றைக் தேர்ந்தெடுக்கலாம்.

menu control - பட்டி கட்டுப்பாடு : விண்டோஸ் உரையாடல் பெட்டியில் பயன்படுத்தும் கீழிறக்கப்பட்டியலைப் போன்றது. <தேர்ந்தெடு> மற்றும் <தேர்ந்தெடு> ஒட்டு