பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

open

169

oper


பலன் தகவல்கள் கணிப்பொறியில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. ஒ. offline operation.


opening a file - கோப்பைத் திறத்தல் : இச்செயல் மென்பொருளால் நடைபெறுவது. இதில் அடிப்படையில் கோப்பு இனங் காணப்படுகிறது; பயன்படுத்தப்படுகிறது.


open loop - திறந்த வளையம் : இது ஒரு கட்டுப்பாட்டுமுறை. இதில் திருத்தம் புறப்புனைவைப் பொறுத்துள்ளது.


open system - திறந்தமுறை : இது ஒரு வலையமைவு. இதில் ஒரு கணிப்பொறி மற்றொரு கணிப்பொறியுடன் தொடர்பு கொள்வது.


open system inter connection, OSI- திறந்தமுறை இடை இணைப்பு, திமுஇ : அனைத்துலகத் தர அமைப்பு. ஒரு தொகுதி மரபுச்சீரிகளை (புரோட்டோகோல்கள்) உருவாக்கியுள்ளது. இதுவே திறந்த முறை இடை இணைப்பு எனப்படும். இதில் 7 அடுக்குகள் உள்ளன.

1) பயன்பாட்டு அடுக்கு.

2) அளிப்பு அடுக்கு.

3) அமர்வடுக்கு.

4) போக்குவரவு அடுக்கு.

5) வலையமைவு அடுக்கு.

6) தகவல் இணைப்பு அடுக்கு.

7) மெய்யடுக்கு.

இவ்வடுக்கு முறையில் அமைந்த எவ்வலையமைப்பும் இதே அமைப்புள்ள வேறு எந்த வலையமைவோடும் தொடர்பு கொள்ளலாம்.


operand - செயலிடம் : இது, ஓர் இனம் அல்லது நினைவக இடமாகும். இதில் கணிதச் செயல் நடைபெறும்.


operating ratio - இயங்குவீதம் : வன்பொருளும் மென்பொருளும் சேர்ந்த தொகுதி அளிக்கும் பணியின் கால அளவு. இந்த நேரம் கிடைக்கும் நேரத்தின் விழுக்காடாகக் கொள்ளப்படுகிறது. இங்கு மொத்த நேரத்திலிருந்து 2 இறக்க நேரம் கழிக்கப்படுகிறது.


operating system, OS - இயங்குமுறை, இமு : இது ஒரு கட்டுப்பாட்டுமுறை. இதில் எல்லா மென்பொருள் வேலைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.


operation - செயல் : 1) ஒரு கணிப்பொறிக் கட்டளையால் கட்டுப்படுத்தப்படும் செயல். 2) எண்கணிதம், முறைமை மற்றும் கையாளும் செயல்களைத் தகவல்கள் கொண்டு செய்தல்.


operation code - செயல் குறிமுறை : செயல்குறிமை. கணிப்பொறிக் கட்டளைப்பகுதி. நிறைவேற்றப்பட வேண்டிய செயல்களைக் குறிப்பது.