பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

over

174

page


கொண்டு வரும் நுணுக்கம்.

overprint - மேல் அச்சிடல் : முன்னரே அச்சிட்ட உருக்கள் மீது அச்சிடல், அச்செழுத்தை மேம்படுத்த இது செய்யப் படுகிறது.

owner - உரிமையாளர் : பய னாளித் தகவல்களைக் கட்டுப் படுத்திப் பயன்படுத்துபவர்.

P

package - A generalized programme written for a major application

அடைப்பம் : ஒரு பொருள் பயன்பாட்டுக்காக எழுதப் படும் பொது நிகழ்நிரல்.

packet - A collection of common punched cards : data расk.

அடைப்பு : துளையிட்ட பொதுவான அட்டைகள் திரட்டு : தகவல் அடைப்பு.

packet - A short fixed block of data used for transmission.

சிப்பம் : செலுத்துகைக்காகப் பயன்படும் குறுகியதும் நிலைத் ததுமான தகவல் தொகுதி.

pad-திண்டு : தனி எழுதியினால் ஒரு தட்டையான பரப்பில் உட்பலனை எழுதி உருவாக்கப் பயன்படும் கருவியமைப்பு. தகவல் உட்பலன் பாடமாக அல்லது வரைகலையாக இருக் கலாம்.

padding - தளமாக்கல் : ஓர் ஆவணத்தின் முனையில் சிறப் பிலா உருக்களின் வெற்றுப் பகுதிகளைச் சேர்த்தல். குறிப் பிட்ட அளவுக்கு அதை உட் படுத்தலே இச்செயலின் நோக்கம்.

paddle - A cursor control device used in computer games. துடுப்பு : கணிப்பொறி விளை யாட்டுகளில் பயன்படும் குறிப்பிக்கட்டுப்பாட்டுக் கருவி யமைப்பு.

page - பக்கம் : குறிப்பிட்ட அளவு நீளமுள்ள நிலையான தகவல் தொகுதி அல்லது ஒரு நிகழ்நிரலின் உட்பிரிவு. சேமிப்பில் இது ஒரு முழுமையாகக் கருதப்படுகிறது.

page fault - பக்கக் குறை : பக்கத்தை நினைவகத்தில் படிக்கும் பொழுது தோன்றும் குறுக்கீடு.

page formatting - பக்கம் படிவமைப்பு : ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்குரிய படங்களைக் காட்டுபவை. இந்நுண் படங்களைப் பயன்படுவதற்குரிய முன்படிவமைப்பைச்