பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sto

207

stru


நேரங்களுக்கு இடையே உள்ள அளவு.


storage media - சேமிப்பு ஊடகங்கள் : தகவல்களைத் தேக்கும் கருவிகள். எடுத்துக்காட்டு : வட்டு, பேழை, நாடா.


storage networking - சேமிப்பு வலையமைவுப் பணி : இது ஒரு புது நுணுக்கம். இங்குத் தகவல் நன்மை தரும் தொழில் ஆதாயமாகும். இதைச் சேமித்துப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


store - சேமகம் : கிடங்கு தகவலைப் பெற்றுத் தேக்கி வைக்கும் ஊடகம் அல்லது கருவியமைப்பு.


stored programme - சேமித்த நிகழ்நிரல் : உருவாக்கப்படும் நிகழ்நிரல் அழியாமல் இருப்பது. இன்று இது எல்லாக் கணிப்பொறிகளிலும் உள்ளது.


STPI, Software Technology Park of India - எஸ்டிபிஐ, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா, இமெதொபூ : இது 1990 இல் நிறுவப்பட்டது. தகவல் தொழில் நுட்ப இயல் அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ளது. முழுதும் தன்னாட்சியுள்ள அமைப்பு.100 விழுக்காடு ஏற்றுமதி வழியமைந்த திட்டத்தைக் கொண்டது இது; இதில் மென்பொருள்கள் அடங்கும். இவை ஏற்றுமதி செய்யப்படுபவை.


streaming - ஓடவிடல் : காந்த நாடாவில் விரைவாகப் பதிவு செய்யும் நுணுக்கம்.


stream - oriented data bus - உயர்நிலை வழித்தகவல் கோப்புகள் : தகவல் கோப்புகளில் ஒருவகை. இவை மேலும் இரு வகைப்படும்.

1) பாடக் கோப்புகள் : இவற்றில் உருக்கள் அடுத்தடுத்து இருக்கும். வேறுபெயர் உயர்நிலைக் கோப்புகள்.

2) தாழ்நிலைக் கோப்புகள் : இவை பாடக் கோப்புகளை விட விரைவானவை. பா. data files.


string - சரம் : உருக்கள் ஒழுங்காகவும் ஒன்றுடன் மற்றொன்று இணைந்தும் இருக்கும் சரடு, எடுத்துக்காட்டு : தகவல் என்னும் சொல் 4 உருச்சரம் கொண்டது. String. h என்பது அடிக்கடிப் பயன்படும் இன்றியமையாச்சார்பு.


structured language - கட்டமைப்பு மொழி : இது ஒரு கணிப்பொறி மொழி. கட்டமைப்புள்ள நிகழ்நிரல் நுணுக்கங்களை வளர்ப்பது. இதற்குச் செயற்கைச் சொல்வளமும் இலக்கணமும் பயன்படும்.


structured programming - கட்டமைப்பு நிகழ்நிரல் : நிகழ்நிரலுக்குப் பயன்படும் முறை இயல். தொடர்நிலைகளில் நிகழ்நிரல் பணிகளை விளக்க முறையான செய்முறை