பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

web

231

web


படம், ஒலி, ஒளி ஆகியவை இருக்கும். இப்பக்கங்கள் ஏனைய பக்கங்களோடு தொ டர்பு கொண்டிருக்கும். ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு கொள்ளும் பக்கங்களின் தொகுதி இடையத்தளம் (வெப்சைட்) எனப்படும். இத்தளத்தின் முதல் பக்கம் தொடக்கப் பக்கம் (ஹோம் பேஜ்) எனப்படும். இத்தொடக்கப் பக்கம் தளம் மற்றும் பிறபக்கங் களுடன் உள்ள இணைப்புகள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். இந்த இணைப்புகளை அழுத்த, ஏனைய பக்கங்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு இடையப் பக்கத்திற்கும் ஒரு தனித்த முகவரி உண்டு. இதற்கு ஒருசீர் மூல இடங்காணி என்று பெயர் (யூ.ஆர் எல்). இந்த யூஆர்எல் அஞ்சல் முகவரி போன்றது. இம்முகவரியில் நகரம், குடியிருப்பு, தெரு, வீட்டு எண் முதலிய அமைந்து, நம் வீட்டின் இருப்பிடத்தைக் காட்டும். அதேபோல், யூஆர் எல்லும் இணையத்தில் பக்கம் இருக்குமிடத்தைக் காட்டும் எ-டு. http://www.yahoo.com. இணையத்தில் தகவல் காண்பதற்கு மேய்தல் என்று பெயர். இதை மேலோட்டம் விடல் என்றுங் கூறலாம். இதைச் செய்யுங் கருவி மேய்வி. இம் மேய்வி ஒரு தனி நிகழ்நிரல் ஆகும். இடையத்திலிருந்து தகவல் பெற உதவுவது. இதற்கு எடுத்துக்காட்டுகள் இரண்டு கூறலாம். இணைய ஆராய்வி, நெட்ஸ்கேப் செலுத்தி. இவ் விரண்டில் முன்னது விண்டோஸ் 98 இன் பகுதியாகக் கிடைக்கும். பின்னது முன்னதைப் போன்றது; பரவலாகப் பயன்படுவது. பா. internet.


web page design - இடையப்பக்க வடிவமைப்பு : இப் பக்கத்தை வடிவமைக்கும் பொழுது பல காரணிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவையாவன : தேவை, அச்சு, இடையத்தைப் படித் தல், இடையத்தை எழுதுதல், நிறம் முதலியவை ஆகும்.


web page editors - இடையப்பக்கப் பதிப்பியற்றிகள் : இவை மென்பொருள் பயன்பாட்டு அடைப்பங்கள். இடைய ஆசிரியர் இடையப்பக்கங்களையும் இடையத் தளங்களையும் உருவாக்க இவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பெரும்பான்மை மேய்வியில் தோன்றும் பக்கத்தை அப்படியே பார்க்க அனு மதிப்பவை. இதனால் நேரம் மிச்சமாகும்; , எச்டிஎம்எல் ஒட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. நமக்காக இந்த ஒட்டுகளை இப்பதிப்பிப்பியற்றிகள் வழங் குகின்றன. எ.டு. நெட்ஸ்கேப் கம்போசர், எம்எஸ் பிரண்ட் பேஜ்.