பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Web

233

web

website design, defects of - இடையத்தள வடிவமைப்புக் குறைகள் : இடையத் தளங் களில் 90 பங்கு அளவுக்குக் குறைகளுடன் அமைக்கப்பட் டுள்ளன. அவை பின்வருமாறு:

1) முக்கிய விற்பனையில் 50 பங்கு இழப்பு.

2) வருகை தருபவர்களில் 40 பங்கு அளவுக்குத் திரும்பு தில்லை.

3) வணிகக்குறிப் பெயர் கெடுதல்; ஏனெனில் வெறுப்புற்ற ஒவ்வொரு வாடிக்கையாளரும் தன் வெறுப்பைச் சராசரி 10 பேருக்குச் சொல்கின்றார்.

4) தவறிய வடிவமைப்புகளை மீண்டும் அமைக்க ஒவ்வோ ராண்டும். அதிகம் செலவழிகிறது. இவை பாரஸ்டர் ஆராய்ச்சி முடிவுகள் ஆகும்.


website improvement - இடையத்தள மேம்பாடு : இதற்குரிய முதல் வழி பயனாளிகளின் வாழ்க்கைக் குறிப்பை அறிதலாகும். இது தொடர் பாகப் பின்வரும் தகவல்கள் பயனளிக்கும்.

1) சராசரி வயது

2) பால்

3) பெருந்தொழில்

4) மணநிலை

5) காட்சித் திசை அளவு

6) கணிப்பு மேடை

7) பயன்படுத்தும் மேய்விகள்

8) திரைப் பகுப்புத்திறன்

9) திறங்கள்

10) இணைப்பு விரைவு

11) பன்ம வழக்காறுகள்

12) இடையப் பக்கங்களை மக்கள் எவ்வாறு காண்கின்றனர்.

13) மேய்தலின் முதன்மைப் பயன்கள்

14) இடையத்தைப் பயன் படுத்துவதிலுள்ள சிக்கல்கள். மேற்குறித்த நிலைகள் பற்றிப் புள்ளி விவரங்கள் அளிக்க இடையத்தளங்கள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு இடையத்தளம் வடிவமைக்கப்பட வேண்டும்.இக்கால இடையம் தனிப்பட்ட வாசகர்களின் நோக்கங்கள் தேவைகள் ஆகிய வை பற்றித் துப்புகள் அளிப்பதாக இல்லை.


web world - வெப் உலகம் : தமிழ்த் தளங்களின் தலைமைச் செயலகம். செய்தி, திரைப் படம், தொழில், விளையாட்டு, சமயம் முதலியவை இடம் பெறுபவை. சிங்கப்பூரிலிருந்து வெளி வருவது.


web writing - இடைய எழுத்து : இடைய வாசகர்களின் கருத்துகளை அறிந்தே, இடையப் பக்கங்கள் அலகிடக்கூடிய பாடத்தைப் பயன்படுத்த வேண்டும் இதற்குத் தேவைப்படுபவை.