பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cell

38

cell


இவற்றை லேசர் ஒளியைப் பயன்படுத்திப் படிக்கலாம்.


cell - A subdivision of computer memory. It stores one unit of data, one bit, A computer contains millions of cells. நுண்ணறை : கணிப்பொறி நினைவகத்தின் உட்பிரிவு. ஓரலகுத் தகவலை மட்டும் சேமிக்கும் அதாவது ஒர் இருமி (பிட்), கணிப்பொறியில் மில்லியன் கணக்கில் இந்நுண்ணைறைகள் உள்ளன.


cell padding - The space between the border of the cell and its contents. Its value should also be in pixels. நுண்ணறை வெளி : நுண்ணறை மற்றும் அதன் உள்ளடக்கங்களின் கரைக்கு இடையே உள்ள வெளி. இதன் மதிப்பு படமத்தில் (பிக்சல்) அமையும். படமம் படக்கூறு.


cell referencing - Type the formula = C3+D3+E3+F3 in cell G3 and copy it to the cells G4 : G7. Click on the cell G4. Now the formula in this cell is = C4+D4+E4+F4. This happens because spread sheets refer the cell addresses in a formula only. நுண்ணறைப் பார்வை : வாய்பாடு = C3+D3+E3+F3 என்பதை G3 நுண்ணறையில் தட்டச்சு செய். பின் அதை G4 : G7 நுண்ணறைகளுக்குப் படி எழுத்து அனுப்பு. G4 என்னும் நுண்ணறையைத் தட்டு. இப்பொழுது இவ்வறையிலுள்ள வாய்பாடு = C4+D4+E4+F4. விரிதாள்கள் நுண்ணறை முகவரிகளை வாய்பாடாகவே பார்ப்பதால், இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.


cell referencing, kinds of - This is of two kinds:

1. Relative cell addressing: This is the default type of cell addressing used by StarCalc.

2. Absolute cell addressing: A cell address can be made absolute by using the dollar sign in front of row and column names.

நுண்ணறைப் பார்வை வகைகள் : இது இருவகை.

1. சார்பு நுண்ணறை முகவரியிடல் : ஸ்டார் கால்க் பயன்படுத்தும் நுண்ணறை முகவரியிடலின் தவறான வகை இது.

2. தனி நுண்ணறை முகவரியிடல் : ஒரு நுண்ணறை முகவரியை தனியாக்கலாம். இதற்கு வரிசைக்கும் பத்திப் பெயர்களுக்கும் முன்னுள்ள டாலர் குறியைப் பயன்படுத்த வேண்டும்.


cell spacing - The space between two cells. Its value should be in pixels. This is an attribute. நுண்ணறை இடைவெளிவிடல் :