பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

EDI

83

eff


தொழில்துறை விளையாட்டாளர்கள் உள்ள பன்முகச் சமூகம். திறந்தவெளிக் கணிப்பொறிச் சூழலில் பணியாற்றுபவர்கள் பயன்கள் பலவற்றைப் பயனாளிகள் பெற உதவுபவர்கள்.


EDI - Electronic Data change. ஈடிஐ : மின்னணுத் தகவல் மாற்றம், மிதமா.


edit - To arrange data into the format required for later processing.
பதிப்பி : பின்பு முறையாக்கலுக்கு வேண்டிய தகவல்களை ஒரு படிவமைப்பில் இருக்குமாறு ஒழுங்கு செய்தல்.


editing functions - பதிப்பு வேலைகள் : இவை பின் வருமாறு:

1. தேவையில்லாத தகவல்களை நீக்கல்.

2. புலங்களை எந்திரப் படிவமைப்புக்கு மாற்றல்.

3. பின் பயன்களுக்கு வேண்டிய தகவல்களைத் தயாரித்தல்

4. படி எடுத்தல்.

5. வெட்டல்.

6. ஒட்டல்.

7. மாற்றீடு செய்தல்.


editor - A computer programme used to keep preparing a text or data for entry into a computer. It may be to retrieve and rearrange data previously stored in a file.
பதிப்பிப்பி : இது ஒரு கணிப்பொறி நிகழ்ச்சிநிரல். கணிப்பொறியில் செலுத்துவதற்குரிய பாடம் அல்லது தகவலை ஆயத்தம் செய்ய உதவுவது. ஒரு கோப்பில் முன்னரே சேமித்த தகவல்களை மீட்கவும் மீண்டும் ஒழுங்கு செய்யவும் உதவுவது.

EDP, Electronic Data Processing - ஈடிபி : மின்னணுத் தகவல் முறையாக்கல்.

EDS, Exchangeable Disk Storage - ஈடிஎஸ் : மாற்றக் கூடிய தட்டுச் சேமகம்.

EDVAC- எட்வாக் : இதை வான் நியூமன் என்னும் கணித அறிஞர் 1945இல் புனைந்தார். நிகழ்நிரல் சேமிக்கப்பட்ட முதல் கணிப்பொறி இதுவே. ஆகவே, சிறப்புள்ளது.

e-education - மின்கல்வி : கல்வி கற்க உதவும் தொழில்நுட்ப முறை. இது பலவகைப் படிப்புகளின் கற்றல் முறையைக் கணிசமாக மாற்றும். கற்பவர்கள் பயனுள்ள தகவல்களை விரைவாக விரும்பியவாறு பெறுவது.

EEPROM - ஈப்ரம் : இது படிப்பதற்கு மட்டுமுள்ள நினைவகம். இதில் நிகழ் நிரலை எளிதில் மின்முறையில் அழிக்கலாம்.

effective address - An address actually used by the computer for executing an instruction.
பயனுறுமுகவரி : ஒரு கட்டளைக் குறிப்பை நிறைவேற்றக் கணிப்பொறி பயன்படுத்துவது.

க.6.