பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file

99

fix


இவ்விரண்டையும் செய்வதற்கு முன் தொடர்புடைய கோப்புக்குச் செல்லுபடியாகக் கூடிய கோப்பு வண்ணப்பி இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இதற்குத் திற, உருவாக்கு சார்பலனைப் பயன்படுத்தலாம். இவ்விரு சார்பலன்களுக்கும் மூன்று சுட்டளவுகள் தேவை. அவையாவன. 1. கோப்பு வண்ணப்பி 2. தாங்கி (சேமிப்பின் பெயர்) 3. மாற்றவேண்டி எண்மிகளின் எண்ணிக்கை.

files, resources - These are special texts containing references to bit maps, text, or other data the application uses. The unique thing about these files is that they enable to change this data without recompiling the application programme. மூலக்கோப்புகள் : இவை தனிப்பாடங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டிற்குரிய இருமப்படங்கள், பாடம் அல்லது பிற தகவல்களுக்குரிய குறிப்புதவிகள் இருக்கும். இவற்றின் தனிச்சிறப்பு இதுவே. இத்தகவலைப் பயன்பாட்டு நிகழ்நிரலை மீள் தொகுக்காமல் மாற்றலாம்.

filter - A type of query to select and display records to match a certain condition. வடிகட்டி : ஒரு குறிப்பிட்ட நிலைக்கு இணக்கமாக இருக்குமாறு செய்யப் பதிவுருக்களைத் தெரிந்தெடுக்கவும் திரையில் காட்டவும் பயன்படும் ஒருவகை வினா அல்லது கொக்கி.

filter, kinds of- வடிகட்டி வகைகள் : 1. தன்வடிகட்டி இது கருவிப்படையில் உள்ளது. பதிவுருக்களைக் கூட்ட இதைத் தட்ட வேண்டும். இவ்வுருக்கள் மின்னோட்டப் புல மதிப்பிற்கு இணையாக அமையும். 2. தவறுவடிகட்டி தவறுநிலையைச் சரி செய்யப் பயன்படுவது.

filter window - வடிகட்டும் சாளரம் : ஒரு வினாவில் நிலைமைகளைச் சுட்டிக் காட்டப் பயன்படும் சாளரத்தைப் போன்ற உறுப்பு.

firmware - கெட்டிப்பொருள் : படிப்பதற்கு மட்டுமுள்ள நினைவகத்தில் சேமிக்கப்படும் நிகழ்நிரல் அல்லது தகவல். மென்பொருளால் இதை மாற்ற இயலாது. மின்சாரம் நிற்கும் பொழுது இது இழப்புக்கு உள்ளவாதில்லை. பா. ROM.

first in first out, FIFO - முதலில் வந்தது முதலில் போதல் : ஒரு நினைவகத்தில் செய்தியைச் சேமிக்கும் மீட்கும் முறை. முதலில் வந்த தகவல் முதலில் மீட்கப்படும். ஒ. last in first out

fixed storage - நிலைச்சேமிப்பு : கணிப்பொறிக் கட்டளை