பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய் உண்ணுேம், பால் உண்ணுேம் - 10t

யையும் உண்டோம். சுவையாகவே இருந்தது. எண்ணெய் விட்டுச் செய்திருந்தார்கள். அங்கே டிஸ்பிரெடன் (tizbretion), பேட்ஸ் வியென்னேவிஸ் (pates vieumois), கஸ்கஸ் g06rtg-Gu65T (Couscous Indien) Grsir Di Gaia Gay my பெயருடன் வேறு பல மரக்கறி உணவுகள் கிடைக்கும் என்று தெரிந்தது. -

"மேல் நாடுகளில் உணவு வரையறையை வைத்துக் கொள்ள முடியாது; முட்டையையாவது சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்' என்று எனக்கு உபதேசித்த நண்பர்களே கினைத்துக்கொண்டேன். பாலையும் புலாலுணவாகக் கருதி விலக்கி, மிக மிகத் துய உணவையே வழங்கும் உணவுச் சாலை பாரிஸில் இருக்கிறதென்ருல் அந்த நண்பர்கள் மூக்கில் கைவைக்கத்தானே வேண்டும்?

அன்று காலையில் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கில் தமிழ் காட்டுக்கும் பிற நாடுகளுக்கும் இருந்த தொடர்பைப் பற்றிய உரைகள் நிகழ்ந்தன. அந்த அரங்குக்கு ஜப்பானிலிருந்து வந்திருந்த டாக்டர் கொபோரு கரஷிமா (Dr. Noboru Karashima) argör jaur g&ausolo griĚist@ir. ஜப்பானில் இந்திய மொழிகளை ஆராயும் அறிஞர்கள் பலர் இருக்கிருர்கள். கிழக்காசியப் பண்பாட்டு ஆராய்ச்சி #&Julb (Centre of East Asian Cultural Studies) argårp கிறுவனம் டோக்கியோ நகரில் இருக்கிறது. வேதங்களே ஆராய்ச்சி செய்யும் வித்தகரும்,மொழியியலில் துறைபோன அறிஞரும், தென்கிழக்கு ஆசிய வரலாற்றை ஆராயும் வல்லுநரும், இக்கால இந்திய வரலாற்றில் ஈடுபடும் ஆராய்ச்சியாளரும்,வங்கமொழியில் பயிற்சியுள்ள புலவரும், பழங்கால இந்திய வரலாற்றை ஆராயும் பேராசிரியரும் அங்கே இருக்கிரு.ர்கள். வடமொழியை ஆராய்ச்சி செய் வதோடு கில்லாமல் திராவிட மொழிகளிலும் ஆராய்ச்சியை கடத்தும் முயற்சியை அங்குள்ள அறிஞர்கள் மேற்கொண் டிருக்கிருர்கள். அவர்களுள் ஒருவர் கொபோரு கரஷிமா.