பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†02 கண்டறியாதன கண்டேன்

மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த திரு தெ. பொ. மீனட்சிசுந்தரனர் தமிழும் பிற மொழி களும் என்பது பற்றிய ஆராய்ச்சி உரையை வழங்கினர். தமிழிலுள்ள கருத்துக்களும் தமிழ் நாட்டு வழக்கங்களும் இந்தியாவிலுள்ள பிற மொழிகளிலும் அவை வழங்கும் காடுகளிலும் எவ்வாறு சென்று கலந்திருக்கின்றன என். பதையும், அந்த மொழிகளிலிருந்து தமிழில் எவ்வளவு இறக்குமதியாகி யிருக்கின்றன என்பதையும் அவர் விரித் துரைத்தார்; அவ்வாறே பிற நாடுகளில் தமிழும் தமிழ்க் கலைகளும் சென்று பரவியிருக்கும் செய்தியையும் எடுத்துச் சொன்னர்.

பக்திநெறி தமிழ் நாட்டிலிருந்தே மற்ற இடங்களுக்குச் சென்று பரவியது என்பதைக் கூறிப் பல மேற்கோள்களைத் தெரிவித்தார். நாயன்மார்களுடைய வரலாறுகள் கன்னட மொழியிலும் தெலுங்கு மொழியிலும் பிற மொழிகளிலும் எவ்வெவ் வகையில் வேறுபட்டும் மாறுபட்டும் வழங்கு கின்றன என்பதை அவருடைய ஆராய்ச்சி உரை காட்டியது. ஆழ்வார்களின் வரலாறும் வாக்கும் பிற மொழிகளில் புகுந்திருப்பதையும் அவர் எடுத்துக் காட்டினர்.

கம்ப ராமாயணம் பிற மொழிகள் வழங்கும் நாடுகளில் எவ்வாறு பரவி நிலவுகிறதென்று அவர் கூறிய செய்திகள் கவனிப்பதற்குரியவை. -

அவர் கூறிய அரிய செய்திகளிற் சில வருமாறு : கன்னட நாட்டில் ஒரு கோயிலில் கம்ப ராமாயண உபங்கியாசத்துக்காக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கேரளத்தில் ஒரு கர்ணபரம்பரை வரலாறு வழங்கி வருகிறது: ... 3

இராவணனது.இலங்கையைத் துர்க்கை காவல்புரிந்தாள். சிவபிரான் அவளே அங்கிருந்து போகச் சொன்னர். இராமன் அப்போதுதான் இலங்கைக்குள் புக முடியும். இராமாயண அத்தத்தைக் கண்டு களிக்கும் பேறு தனக்கு இல்லாமற்.