பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஆராய்ச்சி விநோதங்கள்

'திருவள்ளுவர் தம்முடைய குறளில் துப்பாக்கியைப் பற்றிச் சொல்லியிருக்கிருர் "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி என்று குறளில் வருகிறது.'

" கம்பர் வேகமாகப் போவதற்குக் காரை உவமை கூறுகிருர். ஆகவே கம்பருக்குக் கார் தெரியும். பரதன் வேகமாகப் போனதை, காரெனக் கடிது சென்ருன் என்று சொல்கிரு.ர்.'

போலி ஆராய்ச்சிகளைப் பரிகசிப்பதற்கு இவ்வாறு சில புலவர்கள் பேசிக்கொள்வதுண்டு. ஆனால் உண்மையில் சில அறிஞர்கள் செய்துள்ள ஆராய்ச்சிகளில் இத்தகைய விநோதமான முடிவுகள் இருப்பதைப் பார்க்கலாம். பழங் காலத்தில் திருமலைக்கொழுந்து பிள்ளே என்பவர் மாணிக்க வாசகர் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினர். மாணிக்க வாசகர் மாத்துவப் பிராமணர் குலத்தில் தோன்றினவர் என்று எழுதியிருக்கிருர். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? மாணிக்கவாசகருக்குப் பாண்டிய அரசன் தென்னவன் பிரமராயன் என்ற பட்டம் கொடுத்தான். அகில் ராயன் என்ற பெயர் இருப்பதல்ை அவர் மாத்துவப் பிராமணராகிய ராயராகத்தான் இருக்க வேண்டும் என்று அந்த ஆசிரியர் தீர்மானித்தார். பழுத்த வேதாந்தியும் குருவுக்கு வீங்கி என்று பெயர் பெற்றவருமாகிய தத்துவ ராயர் என்னும் பெரியார் பல நூல்கள் இயற்றியிருக்கிருர், அவருடைய நூலேப் பதிப்பித்தபோது ஒரு புலவர் அதற்குச்