பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 10 கண்டறியாதன கண்டேன்

ஸ்கந்தகுமாரன், கார்த்திகேயன் என்ற பெயர்களால் பழங்கால முதல் வடகாட்டில் சுப்பிரமணியக் கடவுளேப் போற்றினர்கள். இருப்பினும் அங்கே சுப்பிரமணியனைப் பெரிய கடவுளரில் ஒருவகை வைத்து வழிபடவில்லை. மிருச்சகடிகம் ஸ்கந்தனைக் கள்வருக்குத் துணை நிற்பவன் என்று சொல்கிறது. களவு நூலாகிய ஷண்முக கல்பம் என்ற நூலே, டீடர் ஜார்ஜ் (Dieter George) என்பவர் பதிப்பித்திருக்கிருர். அது ஸ்கந்தல்ை அருளப்பட்டதாம். இப்போதுகூட ஸ்கந்தனே வங்காளத்தில் கள்வரின் தெய்வமாக எண்ணுகிருர்கள். (இவற்றைக் கேட்டபோது எனக்கு அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் பாடும் "செம்மான் மகளைத் திருடுந் திருடன் என்ற அடி கினைவுக்கு வந்தது.)

இலங்கைப் பெளத்த நூல்களில் உப்பலவண்ணன் என்ற தெய்வத்தின் பெயர் வருகிறது. அது திருமாலேக் குறிப்பது. உற்பல வண்ணன் அல்லது நீலமலர் நிறத்தினன் என்பது அதன் பொருள். உப்பலவண்ணனுக்கு அடுத்த :படியாகக் கத்தரகம தெய்யோவாகிய முருகனேச் சொல்கிருர்கள். o உப்பலவண்ணனே உபல்வண் என்றும் சொல்வார்கள், கான்கு பெருந் தெய்வங்களில் ஒருவன் அவன். இலங்கைத் திவத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தெய்வம் தலைமை ஏற்கும். உப்பலவண்ணனே முதலிலும் அடுத்துக் கத்தரகமக் கடவுளேயும் சொல்லும் மரபு இருக்கிறது. லங்காதிலகத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று சுமனன், ராமன், லக்ஷ்மணன், கத்தரகம என்ற நான்கு தெய்வங்களேச் சொல் கிறது. பிற்காலத்தில் ஐந்து கடவுளைச் சொல்லும் மரபு வந்தது. இலங்கைத் தீவத்தைக் காக்கும் தெய்வங்கள் அவர்கள்: கத்தரகம, உபல்வண். சமன், நாதன், பத்தினி என்பவர்கள். கத்தரகம என்றது முருகனை: உபல்வண். திருமால், சமன் என்பவன் யமன்: நாதன் என்பவன். அவலோகிதேசுவரன்: பத்தினி என்பவள் சிலப்பதி காரத்தில் வரும் கண்ணகி.