பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி விநோதங்கள் 11t

அந்த ஆராய்ச்சிக்காரர் இலங்கையில் உள்ள நூல்களை ஓரளவு ஆராய்ந்தவர் என்று தெரிகிறது. இலங்கையை இராமர் விபீஷணனுக்கு வழங்கியதாக இராமாயணம் கூறுகிறது. ஆகவே இலங்கையில் இராமனும் விபீஷண லும் காவல் தெய்வங்களாகப் போற்றப்பெறுகின்றனர்.

நான் இலங்கைக்குப் பல முறை போயிருக்கிறேன். சிங்களவர்கள் போற்றும் தெய்வங்களாக முருகனும் திரு மாலும் கண்ணகியும் விளங்குவதை அறிவேன். நாம் கதிர் காமம் என்பதைச் சிங்களவர்கள் கத்தரகம என்கிருர்கள். கம என்பது கிராமம், கக்தர என்பது கருங்காலி. ஒரு காலத்தில் கதிர்காமம் கருங்காலி மரங்கள் அடர்ந்த இடமாக இருந்திருக்கும். ஆதலின் அது கத்தரகம ஆயிற்று. அங்குள்ள முருகனைக் கத்தரகம தெய்யோ என்கி ருர்கள். தெய்யோ என்பது தெய்வம் என்ற சொல்லின் திரிபு என்று நினைக்கிறேன், திருமாலே விஷ்ணு தெய்யோ என்றும் கண்ணகியைப் பத்தினி தெய்யோ என்றும் வழங்குகிருர்கள். கதிர்காமத்தில் பத்தினி தெய்யோவைக் காணவில்லை, வேறு இடங்களில் இந்தத் தெய்வங்களுக்குக் கோயில்கள் இருக்கின்றன. சிங்களவர்கள் வழிபடுகிருர்கள். கதிர்காமத்தில் இப்போது இந்துக்களே விட மிகுதியாகச் சிங்களவர்களே வழிபடுகிருர்கள். அங்கே விஷ்ணு தெய்யோவும் இருக்கிருர். '*

தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கில் மலாயா பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பகுதியில் பேராசிரியராக இருக்கும் திரு அரசரத்தினம் என்பவர் 17, 18ஆம் நூற்ருண்டுகளில் தமிழ் நாட்டிலுள்ள அரசியல் சமுதாய வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சியுரையை நிகழ்த்தினர்.

விஜயநகர அரசின் ஆதிக்கத்திலிருந்து நாயக்க மன்னர்கள் பிரிந்து தலையெடுத்ததையும், அப்பால் பல பாளையக்காரர்கள் அங்கங்கே சுதந்தர ஆட்சி நடத்தி .யதையும், முகம்மதிய அரசர்கள் ஆதிக்கம் பெற்றதையும், பிறகு டச்சுக்காரர்கள். போர்த்துக்கீசியர், ஆங்கிலேயர்