பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி விநோதங்கள் 113

மாத்திரம் அன்று. எல்லா உரைகளும் ஒரே மாதிரி சுவை தருவனவாக இருப்பதில்லை. தெ. பொ. மீ. அவர்களுடைய உரைதான் பயனுள்ளதாக எனக்குத் தோன்றியது. ஸ்கந்த குமார வழிபாட்டைப்பற்றிப் பேசியவர் கூறிய விநோதக் கருத்துக்களே சிங்தையில் மேலிடத்தை வகித்தன.

'அயல்நாட்டில் பெரிய நாகரிக வளம் மிக்க நகரத்துக்கு வந்திருக்கிருேம். இந்த வாய்ப்பு அரிதிற் கிடைத்திருக் கிறது. இங்கே பார்க்க வேண்டியவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இந்த விழாவுக்கு வந்திருந்த ஒவ்வொரு தமிழருக்கும் இல்லாமலா போகும்? ஆகவே கருத்தரங்கில் வழங்கிய எல்லா ஆராய்ச்சியுரை களேயும் கருத்துடைய மாணுக்கரைப் போலக் கூர்ந்து கவனித்து உட்கொண்டவர்கள் யாருமே இல்லை என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆயினும் கேட்ட அளவில் அவை பயனுடையவை என்ற கருத்தும், தமிழுக்கு இவ்வளவு மதிப்பளித்து உலக அரங்கில் இருக்கை அளித்திருக்கிருர்களே என்ற பெருமிதமும் என் போன்ற வர்களின் உள்ளத்தில் தோன்றிக்கொண்டே இருந்தன.