பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கண்டறியாதன கண்டேன்

மொழியானலும் அதைப் பேசுகிறவர்களுக்கு அது உயர்ந்தது. அதை மறுக்க நமக்கு உரிமை இல்லை. மறுப்பதளுல் பகைதான் வளரும். நான் கம்பன் அடித் தொண்டன். கம்பனை மறுத்தவர்கள் பலர். அவர்களே கான் மறுக்கவில்லை. இன்று, கம்பனே மறுத்தவர்களும் கம்பன் திருநாள் மேடை ஏறுகிருர்கள். இதுதான் வளரும் வழி' என்று சொல்லி மாணவர் தமிழ் மன்றத்தை வாழ்த்தி ஒரு பாவைப் பாடினர்.

கலைமணக்கும் பாரிங்கர் தனில்வளரும் மாணவர்கள் காலம் எல்லாம் நிலைபெறுகல் தமிழ்ஆய நீங்காத

காதலுடன் நிறுவி யுள்ள தலையாய மாணவர்தம் தமிழ்மன்றம் இறையருளால் தண்ணுர் மேரு மலைபோல வாழ்க என மனமார

வாய்மணக்க வாழ்த்து கின்றேன்.

அன்பர் கணேசன் கூறிய கருத்துக்களை மானக்கர் மட்டும் அன்றித் தமிழின்பால் அன்பு வீறிய யாவருமே தெரிந்து கொண்டால் மொழியுலகத்தில் காழ்ப்பும் கசப்பும் மறைந்து போகும்.

'உழைப்புத் திறமையும் அறிவுக் கூர்மையும் இருந்தால் எதையும் கற்றுக் கொள்ளலாம்' என்பதைத் தம்முடைய அநுபவத்திலிருந்து சில நிகழ்ச்சிகளே எடுத்துக் காட்டி டாக்டர் மு. வரதராசனர் பிறகு பேசினர். அவர் பேசிய தன் பிழிவு : . - .

'இன்று தமிழின் பழமை உலகறிய உயர்ந்து கிற்கிறது. புதுமையும் வளர்ந்து வருகிறது. இன்னும் இந்தப் புதுமையை வளர்க்க வேண்டும். புதிய புதிய இலக்கியங்களை இயற்ற வேண்டும். அவற்றைப் போற்ற வேண்டும். எங்கள் தலைமுறையில் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் :படித்தோம். இப்போது எல்லாவற்றையும் தமிழில்