பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重26 கண்டறியாதன கண்டேன்

பன்மொழிப் புலவர் திரு கா. அப்பாதுரையார் தமிழ் மொழிக்கும் பிரெஞ்சு மொழிக்கும் உள்ள ஒப்புமைகளே, அடுத்தபடி தாம் பேசுகையில் எடுத்துரைத்தார்.

'சங்கம் வைத்து வளர்க்கத் தமிழ் வளர்ந்தது. அப்படியே சங்கம் வைத்து வளர்ந்தது பிரெஞ்சு மொழி. ஆசிய மொழிகளே வளர்த்துத் தமிழ் வளர்ந்தது போல, ஐரோப்பிய மொழிகளே வளர்த்து வளர்ந்தது பிரெஞ்சு மொழி என்று பேசிய பிறகு அவர் கூறிய கருத்துக்கள்:

இங்கே தமிழைப் பேசுகிறவர்களை விட ஆராய் கிறவர்கள் அதிகம். பிறர் புறத்திலிருந்து தமிழை ஆராய்கிரு.ர்கள். அவர்களுக்கு மாணவர்கள் உயிர்ச் செய்தியைக் கொடுக்க வேண்டும். காதலைப் பற்றி மிகுதியாகச் சொல்கிறது தமிழ். இந்த அளவு காதலைப் பற்றிச் சொல்லும் மொழி வேறு இல்லை. சமய நூல்களும் தமிழில் மிகுதி. சமய உணர்ச்சி இல்லாத வாழ்வு உப்பு இல்லாத சோறு போன்றது. சமய வாழ்வு இல்லாமல் மேல்நாடுகள் தவிக்கின்றன. சமயத்தை யன்றி மற்றவை இல்லாமல் கீழ் நாடுகள் தவிக்கின்றன. இந்த இரண்டும் இணைய வேண்டும். திருக்குறளில் அந்த இணைப்பு இருக்கிறது. தமிழ்ப் பண்பு உடையவன் எல்லா மொழியையும் படிப்பான். இலக்கிய வளமே இல்லாத மொழியையும் படிப்பான். ஏசு கிறிஸ்து பாவிகளையும் கரை ஏற்றினர். தமிழ் ஏசுவைப் போன்றது. எல்லா மொழிகளையும் தழுவி வளர்வது. மாணவர்கள் பிற மொழிகளையும் நன்கு உணர்ந்து அவற்றின் சிறந்த படைப் புக்களைத் தமிழுக்குக் கொணர வேண்டும்.'

மாணவர் தமிழ் மன்றத்தில் பேசியவர்களில் பலர் மாணவர்கள் பன்மொழிகளையும் கற்க வேண்டும் என்பதை வற்புறுத்தினர்கள். அயல் நாட்டில் பேசும்போது வற்புறுத்திச் சொல்லும் இந்தக் கருத்துக்களைத் தமிழ் காட்டிலும் சொன்னல் எவ்வளவு கன்ருக இருக்கும்!