பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஒரு தமிழ் மாணவர்

மாணவர் தமிழ் மன்றத் திறப்பு விழாவில் திரு கா. அப்பாதுரையாருக்குப் பின் கான் பேசினேன். 'மாணவர் தமிழ் மன்றம் தொடங்கும் இந்தச் சமயத்தில் எனக்கு. எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்தில் இருந்த ஒரு தமிழ் மாணவரின் கினேவு வருகிறது. அவர் தம்முடைய ஆசிரியராகக் கருதிய ஒரு பெரியவர் ஆருயிரம் மைலுக்கு அப்பால் தமிழ் நாட்டில் இருந்தார். இருவருக்கும் இடையே கடிதப்போக்கு வரவு கடந்தது. அந்தத் தமிழ் மாணவருடைய கடிதங்களே நான் பார்த்திருக்கிறேன். அந்தத் தமிழ் மாணவர் ஜூலியன் வின்ஸன் என்பவர்; இம்மா நகரத்தில் உள்ள் தேசிய நூல்கிலேயமாகிய பிப்ளியா -Qg£ [5®®ur®®re?ά (Bibliothique Nationale) ucxfurii, றியவர். அந்த ஆசிரியர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள்' என்று தொடங்கினேன்.

ஜூலியன் வின்ஸன் புதுச்சேரியில் இருந்து சில காலம் தமிழைப் படித்தார். பாரிஸ் மாநகரத்திலுள்ள நூல் கிலையத்தில் பிரெஞ்சு இந்தியாவிலிருந்து பல தமிழ் ஒலச் சுவடிகளும் அச்சிட்ட தமிழ்ப் புத்தகங்களும் கொண்டு வந்து சேர்க்கப்பெற்றன. அவற்றையெல்லாம் அவர் ஆராய்ந்தார். பட்டியல் தயாரித்தார். -

ஐயரவர்கள் தாம் பதிப்பித்த நூல்களே வின்ஸனுக்கு அனுப்புவார். அவர் அவற்றைப் படித்துப் பாராட்டி எழுதுவார். பழகு தமிழ் தெரியாதவராதலின் அவருடைய தமிழ்க் கடிதங்கள் வேடிக்கையாக இருக்கும். ஒருமுறை