பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g

ஒரு தமிழ் மாணவர் 133.

அவர் விளக்கம் கூறினர். எல்லா இடங்களிலும் வரிசை வரிசையாக ஒரே மட்டமாக மரங்கள் வளர்ந்திருக் தனவாம். மாணவர்களின் புரட்சி ஒரு சமயம் எழுந்ததாம். அப்போது அவர்கள் அங்கங்கே சில் மரங்களே வெட்டி. விட்டார்களாம். அப்படி வெட்டின மரங்கள் இருந்த இடத்தில் புதிய மரங்களே வைத்து வளர்க்கிருர்களாம்.

  • {~~ : ്ട് கேட்டபோது எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. பாரிஸ் மாநகரத்தில் வீதிகளிலெல்லாம்

கண்ணுடிச் சுவர்கள். கடைகளிலெல்லாம் உள்ளே உள்ள பண்டங்கள் தெளிவாகக் காணும்படி கண்ணுடித் தடுப்பை அமைத்திருக்கிருர்கள். மாணவர்கள் புரட்சி செய்தபோது அவர்களுக்குண்டான வெறியில் அந்தக் கண்ணுடிச் சுவர் களே யும் கதவுகளேயும் தடுப்புக்களையும் தகர்த்தெறிய வில்லையா? நம் ஊராக இருந்தால் அத்தனையும் கிர்த்துளி யாகியிருக்குமே! இந்தக் கேள்வியை அன்பரிடமே கேட்டேன். 'இந்த காட்டு மாணக்கர்கள் அப்படிச் செய்யவில்லை. தங்கள் வெறுப்பைக் காட்டிக்கொள்ள மரங்களே அழித்தார்கள். கண்ணுடிச் சுவர்களேத் தொட வில்லை' என்ருர். 'அப்படியா! வெறியிலும் ஒரு நெறியா?" என்று சொல்லி வியப்பில் ஆழ்ந்தேன். அவர்களால் அல்லவா காட்டின் கலைகள் வளரும்:

மூன்ருவது நாள் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் கொஞ்சம் வெளியிலே சுற்றிவிட்டு வரலாம் என்று அன்பர் ரொபே ஸேன் முானுடன் புறப்பட்டோம். பாதாள ரெயிலில் போைேம், பஸ்ஸில் போளுேம். கன்கார்டு என்ற இடம் சென்று அங்குள்ள வண்ண வண்ண நீர் எழுச்சிக்களைக் கண்டோம். பகலிலே பாரிஸ் அழகு ஒரு விதம், இரவிலே அதன் அழகு ஆயிரம்மடங்கு மிகுதியாகத் தோன்றுகிறது. வண்ண வண்ண ஒளிகள் மகிழ்ச்சிக் கோலாகலங்கள், ஒய்யார நடனங்கள், கேளிக்கைகள், மோகலாகிரிகளின் வெறி விளையாடல்கள். ஆணும் பெண்ணும் காணத்தைக்